பேதங்களை மறந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணந்து எமக்கு விடுதலையைப் பெற்றுத்தாருங்கள்
தமிழ்க்கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து எமக்கு விடுதலையைப் பெற்றுத்
தாருங்கள் என சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த வேண்டுகோளில் மேலும் தெவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர்களின் துன்பங்களையும்
வேதனைகளையும் அரசியல் நீரோட்டத்தால் வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி தமிழ் மக்களுக்கு
சேவையாற்றியது அளப்பரிய செயல். கல்விச் சாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும்
மாணவர்களுக்கு உதவி புரிந்தமை, தமிழ் அரசியல் கைதிகளுக்கும் உதவியமை, அவர்களுக்காக
குரல் கொடுத்தமை மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு
உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களுக்கு சேவை புரிந்தீர்கள். உதவி
செய்தீர்கள் இவை அனைத்தும் மறக்க முடியாதவை.
அரசியல் நீரோட்டத்தில் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் நீங்கள் என்பதில் எந்தவித ஐயமும்
இல்லை. இருப்பினும் தற்கால தேர்தல் நிலையில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையும் விட்டுக்
கொடுப்பும் சகிப்புத் தன்மையுமாய் நடந்து ஒருமித்த கருத்துகளை தெரிவியுங்கள்.
மூத்த உறுப்பினர்கள், இளைய உறுப்பினர்கள் என்று விட்டுக் கொடுக்காமல் ஒவ்வொருவரும்
பிரிந்து நின்றும் கட்சி தாவியும் தனி மனிதனாய் நின்றும் என்னத்தைச் சாதிக்க டியும்.
உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளையும், செயற்பாடுகளையும் பேதங்களையும் மறந்து
ஒற்றுமையுடன் நடக்க வேண்டும். இன்று தமிழர்கள் கொல்லப்பட்டு, அகதிகளாகி, அநாதைகளாகி
வீதிக்கே வந்து விட்டார்கள். வடக்கில் மக்கள் சொல்ல முடியாத துன்பங்களை
அனுபவிக்கின்றார்கள். ஆறுதல்படுத்தவும் ஆறுதல் தரவும் யாரும் இல்லை.
அரசியலில் எங்கள் ஏகப் பிரதிநிதிகள் நீங்கள். தனிப்பட்ட பேதங்களை மறந்து நீங்கள் அனைவரும்
ஒன்றிணைந்து தமிழ் மக்களின் இன்னல்களை நீக்க வேண்டும்.
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து
செயற்பட்டு முடிவெடுத்து கருத்துகளை தெவிக்க வேண்டும். இது தமிழ் மக்களின் விருப்பும்,
எதிர்பார்ப்பும் ஆகும். உங்களுக்குள் ஏற்படும் முறுகல்களையும் தனி மனித விரோதச்
செயற்பாடுகளையும் மறந்து தமிழ் மக்களின் துன்பங்களை துடைக்க வேண்டிய கடமையும்,
பொறுப்பும் உங்களை சாரும்.
ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில்
விட்ட தவறுகளை இனியும் விடாது திருத்தி நடக்க வேண்டும்.
தனித் தனியே பிரிந்து சென்று எதையும் சாதிக்க டியாது.
இதை கடந்தகால வரலாறுகள் கூறுகின்றன.
ஒற்றுமையே பலம். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதை ஏற்படுத்துவீர்கள் என்ற
நம்பிக்கையுடன் அரசியல் நீரோட்டத்தில் உங்களை ஆதக்க தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனர்.
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே அரசியல் நீரோட்டத்தில் தமிழ் மக்களுக்கு நல்லதொரு
சாதகமான பதிலைத் முடிவை உங்களால் ஏற்படுத்த முடியும். இல்லையேல் தனித்தனியே
உதிசலாகி கட்சி தாவினால் அரசியலில் உங்களுக்கு மட்டும் நல்லதொரு தனிமையான சுகபோக
வாழ்வை அமைத்துக் கொள்ளலாம்.
மக்களின் வாக்கினாலும் அபிமானத்தாலும் சென்ற அரசியல் தலைவர்களான நீங்கள் பிளவுபடுவது
எவ்விதத்திலும் நியாயம் இல்லை.
இதனால் தமிழன் துன்பங்களை மேலும் தூண்டத்தான் உங்களால் முடியும். நீங்களும் வருகின்ற
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை ஒரேடியாக அநாதைகளாக்கி விடாதீர்கள். நிர்க்கதியாய்
நிற்கும் தமிழ் மக்களுக்காக அரசியல் நீரோட்டத்தில் ஒன்றிணைந்து உங்கள் கரங்களை ஓங்க
வைக்க வேண்டும். மக்கள் பலம் உங்களின் பலம் பலமிக்க ஒரு அரசியல் வியூகத்தை
ஏற்படுத்தும்.
உங்கள் அனைவரின் ஒற்றுமையை எதிர்பார்த்தே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் உங்களை
ஒன்றிணைத்து ஆதரிப்போம். நாங்கள் அனைவரும் உங்களை எமது சொத்தாகத் தான் நினைத்து
வாழ்கிறோம். ஒரு தாய் பிள்ளை போல் நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து எமக்கு
சுதந்திரமான, நிம்மதியான வாழ்வை தேடித் தர வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதியிடம் எமது நிலையை எடுத்துக் கூறி எமக்கு விடுதலை பெற்றுத்
தாருங்கள். இது தமிழ் மக்கள் பலரின் வேண்டுகோளாகவும் உள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment