இனப்பிரச்சினையின் தீர்வும் ஜனாதிபதித் தேர்தலும்
தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிரணி யின் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண் டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி வேண் டுகோள் விடுத்திருக்கின்றது.
இந்தக் கட்சி எப்போதும் ஐக் கிய தேசியக் கட்சியின் நிழலாகச் செயற்படுகின்றதென்ப தால் இது விடுத்திருக்கும் இந்த வேண்டுகோள் புதுமை யானதல்ல.
இதில் வேடிக்கை என்னவென்றால் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் முடிவு எடுக்க ப்படுமாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு விதமா கத் தீர்மானித்தால் நிலைமை என்ன என்ற கேள்வி ஒரு புறமிருக்க, தென்னிலங்கைத் தமிழர்கள் என்றும் வடக்குத் தமிழர்கள் என்றும் கோடு பிரித்துப் பார்ப்பது சரியானதா என்ற கேள்வி எழுகின்றது.
ஜனநாயக மக்கள் முன்னணி தேசிய மட்டத்தில் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்ஹ இனப் பிர ச்சினையை வடக்கு, கிழக்கு பிரச்சினை என்று கூறுவதே வழக்கம்.
இனப் பிரச்சினை எனக் கூறுவதை அவர் விரு ம்பவில்லை. இனப் பிரச்சினையை ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் பிரச்சினைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் அணுகுமுறையே இது.
ரணிலின் பாரம்பரியத்தில் ஜன நாயக மக்கள் முன்னணியும் இனப் பிரச்சினையைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பத னாலா தென்னிலங்கைத் தமிழர்கள் என்றும் வடக்குத் தமி ழர்கள் என்றும் பேசுகின்றது?
இலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இனப் பிரச்சினையை மையமாக வைத்துத் தீர்மானத்து க்கு வர வேண்டிய தேர்தலாக இன்றைய ஜனாதிபதித் தேர்தல் உள்ளது. இத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் பற்றிய சரியான மதிப்பீட்டுக்குத் தமிழ் மக் கள் வந்தாக வேண்டும்.
எதிரணியின் பிரதான வேட்பாளர் இராணுவப் பின்னணியை கொண்டவர். அரசியல் பின்னணி இல்லாதவர். இவருக் கென்று ஒரு அரசியல் கட்சி இல்லை. ஒன்றுக்கொன்று மாறுபட்ட சித்தாந்தங்களைப் பின்பற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இவரை வேட் பாளராக நிறுத்தியிருக்கின்றன.
இக் கட்சிகளைத் திருப்திப் படுத்தும் வகையிலேயே இந்த வேட்பாளர் செயற்பட வேண்டியவர். இரண்டு கட்சிகளும் இனப் பிரச்சினையின் தீர்வைப் பொறுத்த வரையில் எதிர்மறை நிலைப்பாட் டைக் கொண்டவை. மக்கள் விடுதலை முன்னணி இனப் பிரச்சினை இருப்பதையே ஏற்கவில்லை.
அப்படி ஒரு பிரச்சினை இல்லை என்கின்றது. பதின்மூன்றாவது அரசி யலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத் தக் கூடாது என்பதில் இக்கட்சி தீவிரமாக இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனப் பிரச்சினையின் தீர்வில் சிறிதளவும் அக்கறை இல்லை.
சிறுபான்மையினரின் நண் பனாக வேஷம் போடுகின்றதேயொழிய இனப் பிரச்சி னையின் தீர்வுக்காக அதனிடம் ஒரு திட்டமும் இல்லை. சிறுபான்மையினரின் தீர்வுக்காக ரணிலிடம் ஒரு திட்ட மும் இல்லை என்பதை நீண்ட காலம் கட்சியின் முக்கிய ஸ்தராக இருந்த அஸாத் சாலியே ஒத்துக்கொள்கிறார்.
இந்த நிலையில் எதிரணி வேட்பாளரால் இனப் பிரச்சினை யின் தீர்வுக்கு எதுவுமே செய்ய முடியாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதின்மூன்றாவது திருத்தத்தி லும் பார்க்க மேலான தீர்வை நடைமுறைப்படுத்தப்போவ தாகக் கூறுவதோடு நிற்காமல் அதற்கான ஏற்பாடுகளை யும் செய்திருக்கின்றார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு வின் அறிக்கை இப்போது ஜனாதிபதிக்குக் கையளிக்கப்ப ட்டுவிட்டது. இவ்வறிக்கையில் உள்ள ஆலோசனைகள் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்க மேலானவை. இவ்வாலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனா திபதிக்கும் அவரது கட்சிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அளிப் பது இனப் பிரச்சினையின் தீர்வுக்குச் செய்யும் பங்களிப் பாக அமையும்.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment