பிரபாகரனை 2009 மாவீரர் உரை நடத்த விடமாட்டேன் என வாக்குறுதி அளித்தேன் அதனை செய்தேன் - காத்தான் குடியில் சரத்பொன்சேகா
2008 ம் ஆண்டு நான் இரண்டு வாக்குறுதிகளை அளித்தேன் ஒன்று இந்த யுத்தத்தினை அடுத்த இராணுவ தளபதிக்கு விடமாட்டென் என்றேன் அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனை 2009 மாவீரர் நாள் உரையினை நடத்த விடமாட்டேன் என கூறினேன். இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றினேன். பயங்கரவாதத்தினை பூண்டோடு அளித்தேன். இவ்வாறு கூறினார் சரத்பொன்சேகா.
இன்று காத்தான்குடியில் நடந்தெ தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார். இந்த யுத்தத்தில் கிழக்கு வாழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பதனை நான் அ|றிவேன். ஆனால் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது காரணம் போர் ஓய்ந்துவிட்டது. ஆனால் மஹிந்த அரசு இப்போதும் போர் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டினை காட்டுகின்றது. என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.கூட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் நூற்று கணக்கானோர் கலந்துகொண்டனர். ஐக்கியதேசிய கட்சியின் அமைப்பாளர்கள், முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ரணில் விக்கிரமசிங்காவும் கலந்துகொண்டார்.
இதே வேளை 55 வீத வாக்குகளை பெற்று சரத்பொன்சேகா வெற்றிபெறுவார் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுசெயலர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment