மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் மாரடைப்பால் மரணம்
திடீரென மார்புவலி ஏற்படடதை அடுத்து அவர் இன்று அதிகாலை தனியார் வைத்தியாசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் மரணமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
52 வயதான பெ.சந்திரசேகரன் இதொகாவில் இருந்தே அரசியலுக்கு வந்தவர். ஆயினும் இதொகா தலைமையுடன் முரண்பட்டுக் கொண்டு மலையக மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
மலையகத்தில் முக்கிய அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்று வந்த மலையக மக்கள் முன்னணி இவரது மறைவினால் பெரும் சவால்களை எதிர்நோக்கும் என்று கருதப்படுகிறது.
எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் இவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment