வைகோ அவர்களே பந்து இப்ப உங்கள் பக்கம்... என்ன செய்வதாக உத்தேசம்??????
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை நேற்று (12.01.2010) வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சந்தித்து பிரபாகரனின் தந்தை இறந்துள்ள நிலையில் அவரது தாயார் மற்றும் மாமியார் இந்தியாவில் குடியேற அனுமதிக்கப்படுவார்களா? என்று ஒரு கேள்வியைத்தொடுத்தனர்.
அதற்கு பதிலளித்த ராஜபக்க்ஷ
இலங்கை ராணுவம் நடத்திய போரின்போது உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி, மாமியார் எராம்பு ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறி இந்தியாவில் நிரந்தரமாக குடியேற விரும்பினால் அதற்கு தடை ஏதும் இல்லை என்றார்.
பிரபாகரனின் தாயார் பார்வதி பிள்ளை மற்றும் அவரது மாமியார் எரம்பு ஆகியோர் தங்களது எதிர்கால திட்டம் பற்றி எதுவும் கூறவில்லை.
இந்தியா சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க விருப்பம் இருந்தால் பிரபாகரனின் தாயார், மாமியார் ஆகியோர் அப்படியே செய்யலாம். எனினும் இந்தியா இதற்கு அனுமதிக்கவேண்டும்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை ராணுவ முகாமில் தங்கி இருந்தபோது அவருக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவர் உயிரிழந்த பிறகும் உரிய மரியாதை தரப்பட்டது. வேலுப்பிள்ளை உடல் தகனம் செய்யப்பட்டபோது அரசு சார்பில் சில வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வேலுப்பிள்ளையின் இறுதிச்சடங்கில் சுமார் 300 பேர் பங்கேற்றனர். பிரபாகரனின் தாயார் பார்வதி, மாமியாரும் கலந்து கொண்டனர் என என்னிடம் அதிகாரிகள் தெரிவித்தனர் என்றார் ராஜபக்க்ஷ.
மதிமுக பொதுச்செயலர் வைகோ "பிரபாகரனின் தாயாரை இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசு அனுமதி தரவேண்டும் என்றும், அவரை தனது வீட்டில் வைத்துப் பராமரிப்பேன் என்று பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கின் போது, வைகோ தொலைபேசி வழியாக நடத்திய இரங்கல் உரையின்போது குறிப்பிட்டார்"
இப்ப மஹிந்த அனுப்பத்தயாராம்...... வைகோ ...... நீங்கள் ஏற்கத்தயாரா......? அப்படியென்றால் தாமதிக்காமல் உடனடியாக உங்கள் அரசிடம் அனுமதி கேளுங்கள்...... அதற்காக இந்த விடயத்தை பல வருடங்களுக்கு ஜவ்வுமிட்டாய் மாதிரி இழுத்துச்செல்லாமல் இரண்டொரு கிழமைகளில் நடைபெறக்கூடிய விடயமாக செயல்படவும்..... முடியுமா??????
0 விமர்சனங்கள்:
Post a Comment