நிவாரண கிராமங்களில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்
“அடுத்ததாக என்ன நடக்குமோ என்ற ஒரு பயங்கரமான சூழலில் ஒருபுறம் உயிரையும் மறுபுறம் பிள்ளைகளையும் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த அந்த நாட்களை நினைத்தாலே குலை நடுங்குகிறது.
அந்தச் சமயத்தில் எங்களையும் பிள்ளை களையும் பாதுகாத்து எமக்கு கைகொடுத்து கரையேற்றியவர் ஜனாதிபதி ராஜபக்ஷ. ஒரு புதிய வாழ்க்கையை பெற்றுத் தந்தார். அதனால் அவரை நாங்கள் என்றுமே மறக்கவே மாட்டோம்.”
வவுனியாவிலுள்ள நிவாரணக் கிரா மங்களுக்கும், புனர்வாழ்வு நிலையங்களுக்கும் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் விமானம் மூலம் அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனர். வவுனியா முகாம்களில் இடம்பெயர்ந்தவர்களை அவர்கள் சந்தித்தபோது பலர் இவ்வாறு கூறுவதை கேட்கக் கூடியதாக இருந்தது.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப் படை ஏ. என். 32 ரக விமானம் மூலம் அதிகாலை 5.45 மணியளவில் புறப்பட்டுச் சென்ற நாங்கள் சுமார் 45 நிமிட நேரத்தில் வவுனியா விமானப் படைத் தலைமையகத்தைச் சென்றடைந்தோம்.
யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் எந்தவித அச்சமும் இன்றி ஊடகவியலாளர்கள் விமானத்தில் செல்லக்கூடியதாக இருந்தது.
எம்முடன் வந்திருந்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தலைமையில் வவுனியா விமானப் படைத் தளத்திலிருந்து இரண்டு பஸ் வண்டிகள் மூலம் வன்னி பாதுகாப்பு படைத் தலை மையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டம் தொடக்கம் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் சகலவிதமான உதவிகள் மற்றும் மீள்குடியமர்த்தல் தொடர்பான முழுமையான விபரங்களை வன்னி பாதுகாப்பு படைத் தளபதியும் இடம்பெயர்ந்த மக்களுக்கான தகுதிகாண் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார்.
“30 வருட காலமாக இந்த நாட்டில் நிலவிய யுத்தத்தை சுமார் 2 வருடமும் 10 மாதக் காலத்திற்குள் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது. இதற்கு முப்ப டைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சரியான தலைமைத்துவமும், பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டலும் படை வீரர்களின் அர்ப்பணிப்புமாகும்” என்றார் வன்னி தளபதி கமல் குணரட்ன.
இந்த வெற்றிக்காக 6 ஆயிரம் படை வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்ததுடன் 27 ஆயிரம் படை வீரர்கள் காயமுற்றனர். உயிரிழப்பு இல்லாத நடவடிக்கையின் மூலம் இறுதிக் கட்டத்தில் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 2 இலட்சத்து 82 ஆயிரம் அப்பாவி பொது மக்களையும், பிள்ளைகளையும் மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தோம். புலிகள் இயக்கத்திலிருந்து போராடிய அல்லது பலாத்காரமாக அழைத்துச் செல்லப்பட்ட 12,258 பேருக்கு வெற்றிகரமாக புனர்வாழ்வு வழங்கி வருகின்றோம் என்றார்.
ஓரிரு தினங்களில் இலட்சக் கணக்கான மக்களை மீட்டெடுப்பதென்பது மிகவும் பெரிய சவாலாக இருந்தது. என்றாலும் வந்தவர்களை அரவணைத்து அவர்களுக்குத் தேவையான உணவு உடைகள் உட்பட சகல அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்பட்டதுடன் காயமடைந்த நிலையில் வந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சையும் வழங்கப்பட்டது என்றார்.
எந்த ஒரு அரசாங்கத்தினாலும் செய்ய முடியாத பாரிய சேவையை படையினரின் உதவியுடன் அரசாங்கம் அன்று முன் னெடுத்ததாக குறிப்பிட்ட அவர், தற்பொழுது அந்த மக்களுக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளதுடன் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களை விரைவில் மீளக் குடியமர்த்துவதன் மூலம் அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நிவாரணக் கிராமங்களும், அடிப்படை வசதிகளும்
2 இலட்சத்து 82 ஆயிரம் மக்கள் மீட்டெடுக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களாக நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டனர். ஆறு மாதமென்ற குறுகிய காலத்திற்குள் ஒன்றரை இலட்ச மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு தற்பொழுது சுமார் ஒரு இலட்சம் மக்களே நிவாரணக் கிராமங்களில் உள்ளனர். (டிசம்பர் 23ம் திகதி வரையிலான எண்ணிக்கை)
இடம்பெயர்ந்த மக்களுக்கென நிவாரணக் கிராமம், இடம் பெயர்ந்தவர்கள் தங்க வைக்கும் நிலையம் (யிளிஜி விலீntலீr), புனர்வாழ்வு நிலையம் (ஞிலீhabilitation விலீntலீr), என்ற மூன்று பெயர்களில் அமைக்கப்பட்டு வலயம் (Zonலீ) என்று முதல் ஒன்பது வரை அமைக்கப்பட்டு அதற்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
கதிர்காமர் (வலயம் – 0), ஆனந்தகுமாரசுவாமி (வலயம் – யி ), இராம நாதன் (வலயம் – யியி ), அருணாச்சலம் (வலயம் – யியியி ), வலயம், யிV, V, Vயி , தர்மபுரம் மற்றும் வீரபுரம் ஆகிய ஒன்பது கிராமங்களே அமைக்கப்பட்டன. இதில் கதிர்காமர் மற்றும் ஆனந்தகுமாரசுவாமி ஆகிய இரு நிவாரணக் கிராமங்கள் அர சாங்கத்தின் பூரண பங்களிப்புடன் முன்னெடு க்கப்படுகிறது. இதில் சகல அடிப்படை வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.
வெகுவாக மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதால் ஒவ்வொரு நிவாரணக் கிராமங்களாக மூடப்பட்டு வருவதுடன் தற்பொழுது தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டு வருகின்றது என்றார்.
கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் ஆரம்பத்தில் 21,726 இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அது தற்பொழுது 7077 ஆக குறைந்துள்ளது- ஆனந்தகுமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் 43824 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்பொழுது இந்த எண்ணிக்கை 20,647 ஆகக் குறை ந்துள்ளது. இந்த இரு நிவாரணக் கிராமங்களும் அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கக் கூடியவை. இது தவிர, இராமநாதன் நிவா ரணக் கிராமத்தில் 69,513 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அது தற்பொழுது 20,509 ஆகவும், அருணாச்சல நிவாரணக் கிராமத்தில் 41,175 என்ற தொகை 15,107 ஆகவும் குறைந்துள்ளது. வலயம் நான்கில் 37,130 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அது தற்பொழுது 11,772 ஆகவும் வலயம் ஐந்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 8,192 என்ற தொகை 2,655 ஆகவும், வலயம் ஆறில் தங்க வைக்கப்பட்ட 6,349 என்ற தொகை 3,664 ஆகவும் குறைந்துள்ளது என்றும் புள்ளி விபரங்களுடன் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன விளக்கினார்.
மக்களின் மனதில் உள்ளவை...
‘ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே எமது உயிரும், பிள்ளைகளும் பாதுகாக் கப்பட்டதுடன் தற்பொழுது எவ்வித அச்சமுமின்றி நிம்மதியாக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த 31 வயதுடைய செல்லையா விசியேந்திரன்.
வெறுமனே உடுத்த உடையுடன் அச் சத்துக்கு மத்தியில் வந்த எமக்கு இன்று அரசாங்கம் சகல வசதிகளையும் செய்து தந்துள்ளது. இதற்காக நாங்கள் ஜனாதிபதிக்கு என்றும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
உயிரையும், ஒரு சில உடுதுணிகளையும் தவிர சகலதையும் இழந்து வந்த எமக்கு இன்று எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஆறு மாத காலமாக எனது மனைவி, இரு குழந்தைகளுடன் இந்த கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்கி யுள்ளேன். இந்த ஆறு மாதம் காலத்திற்குள் எந்த ஒரு பிரச்சினைகளும் இன்றி வாழ் கின்றோம் என்றும் விசியேந்திரன் விபரித்தார்.
‘தற்பொழுது எம்மில் பலர் சிரித்த முகத்துடனும் சந்தோசத்துடனும் வாழ்கின்றனர். இதற்கு பிரதான காரணம் தங்களது பிள் ளைகளை பிடித்துச் செல்ல எவரும் வர மாட்டார்கள் என்பதாகும் என்றார். பூநகரி யைச் சேர்ந்த பாலச்சந்திரன் சுலோச்சனா. 24 வயதுடைய இவர் தொண்டர் ஆசிரியர். உங்களைப் பற்றியும், இங்கு செய்து தரப் பட்டுள்ள வவசதிகளைப் பற்றியும் கூறுங் களேன் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு
‘நான் அரசாங்க தமிழ் மகா வித்தியாலயத்தில் தொண்டர் ஆசிரியராக கடமையாற்றினேன். பிரச்சினையில் சிக்குப்பட்டு அல்லல்பட்ட போது நானும் அப்பா, அம்மா, தம்பி, தங்கை அனைவரும் இராணுவத்தினரால் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டோம். நான் இப்போதும் கூட எனது அறிவை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேன். அதாவது இந்த கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் லிகிதராக சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன். எனக்கு மேலும் பல ஒத்துழைப்புக்கள் வழங்கப்படுகின்றன’ என அவர் பதிலளித்தார்.
‘ஆரம்ப காலத்தில் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் செயற்பாடுகளுககு ஒத்துழைப்பு வழங்கினாலும் அவர்கள் எமது பிஞ்சுகள் மீது கை வைக்க ஆரம்பித்ததுடன் அவர்கள் மீது எமக்கு வெறுப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதியும் படையினரும் எம்மை மீட்டெடுக்காவிட்டால் இன்று நாங்களும் எமது பிஞ்சுகளும் உயிர் வாழ்ந்திருப்போமா என்பதே சந்தேகம் என்றார் சிவகுமார்.
நாங்கள் நிவாரணக் கிராமத்தில் வாழ்ந் தாலும் எமக்கு அவ்வப்போது தேவையான சகல வசதிகளும் செய்து தரப்படுவதுடன் சுதந்திரமாக நடமாடும் சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. எம்மை விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இது எமக்கு மேலும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்றார் இவர்.
இவ்வாறே பலரும் எங்களிடம் பேசும் போது தெரிவித்தனர். ;நிவாரணக் கிராமம்... நிவாரணக் கிராமம்.... என்று கூறுகின்றனர். அங்கு சென்று பார்த்தபோது தான் அதன் உண்மை நிலைமை புரிந்தது.
உண்மையில ஒரு சிறிய கிராமம் ஒன்றில் என்னென்ன வசதிகள் இருக்குமோ அதேபோன்று சகல அடிப்படை வசதிகளும் இங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் காவல் அரண், சிகிச்சை நிலையம், கூட்டுறவு நிலையம், உப தபாற் கந்தோர், நலன்புரி நிலையம் வயது வந்தோருக்கு தனியான இடம் கல்வி கற்பவர்களுககு தனியான வசதி என்று அரசாங்கம் கூறுவது போன்று சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதை நேரடியாகக் கண்டோம்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப் பட்டிருந்த அந்த ஆரம்ப நேரத்தில் அங்கே சென்றிருந்தபோது நாம் கண்ட வற்றுக்கும் இப்போது பார்த்தவைக்கும் இடையே பல வித்தியாசங்கள். சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டோம்.
ஆனால் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக சில வீதிகளில் தண்ணீர் நிறைந்திருந்ததையும் சேறு நிரம்பிக் கிடந்ததையும் கண்டோம். அந்த அடைமழைக்கு மத்தியிலும் படை வீரர், வைத்தியர்கள், அரசாங்க ஊழியர்கள் இந்த மக்களுக்கான சேவைகளை ஆற்றிவருவதை காணக் கூடியதாகவும் இருந்தது.
கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள்
மக்களை விரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை அரசாங்கத்தின் வேண்டு கோளுக்கிணங்க படையினரும், பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்றன என்று கூறியபடியே பிரிகேடியர் உதய நாணயக்கார எம்மை கண்ணிவெடி அகற்றும் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
மண் தரை வீதியூடாக அழைத்துச் செல்லப்பட்டோம். அந்த வீதியின் இரு மருங்கிலும் அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்களில் ‘அபாயம்’ என்ற குறி போட்ட பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட பகுதி அது.
அங்கே ஒரு இடத்தில் குடிசை போன்று அமைக்கப்பட்ட வீடுகளும் அதற்கு அருகில் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இராணுவத்தினருடன் வெளிநாட்டவர்கள் சிலர் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.
‘இதுதான் பெரிய தம்பனை மற்றும் பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட இடங்கள். சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட (பெடரேஷன் ஒப் சுவிஸ் டீமைனிங்) எப். எஸ். டி. என்ற அமைப்பு கண்ணிவெடி அகற்றும் பணிகளை இந்தப் பிரதேசத்தில் மேற்கொண்டுள்ளது.
‘இப்பிரதேசத்தில் 2 கோடி 2 இலட்சத்து 74 ஆயிரத்து 571 சதுர மீற்றர் (20,274,571) நிலப் பரப்பிலிருந்து பெருந்தொகையான வெடி பொருட்களையும் கண்ணிவெடிகளையும் இதுவரை மீட்டெடுத்துள்ளோம் என்றார்.’ என். எஸ். டி. அமைப்பின் பிரதிநிதியான இந்திய நாட்டைச் சேர்ந்த மேஜர் ராஜு,
அடர்ந்த காடுகளுடன், பாழடைந்த பிரதேசமாகவும் இருப்பதால் பல்வேறு நவீன இயந்திரங்கள் மற்றும் உத்திக ளைப் பிரயோகித்தே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார். எவ்வாறு கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன என்பதையும் எமக்குக் காண்பித்தார்.
ஸாதிக் ஷிஹான்
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment