போரின் போது சரணடைந்த 712 பேர் நேற்று மனிக் முகாமில் வைத்து விடுவிப்பு
வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது படையினரிடம் சரண் அடைந்த 712 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர். வவுனியா மனிக் பாம் முகாமுக்கு நேற்றுப் பிற்பகல் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடையாளமாக 15 பேரை விடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,பிரதி நிதிஅமைச்சர் எஸ். புத்திரசிகாமணி, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன், வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். சரண் அடைந்தோரை ஜனாதிபதி அடையாளமாக விடுவித்ததைத் தொடர்ந்து ஏனைய 697 பேரும் பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு நலன் புரிநிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உறவினர்களி டம் ஒப்படைக்கப்பட்டனர்.
Uthayan
0 விமர்சனங்கள்:
Post a Comment