உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றும் அறிவிப்பை ஜனாதிபதி இன்று வெளியிடுவார் துரையப்பா விளையாட்டரங்கப் பொதுக்கூட்டத்தில்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றும் அறிவிப்பை, குடாநாட் டுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று முற்பகல் 11 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைத்துப் பகிரங்கமாக அறிவிப்பார். உயர்பாதுகாப்பு வலயங்களின் அரண்களை தகர்த்து, மக்கள் நடமாட்டத்துக்குத் திறந்துவிடும் பணிகள் இன்றே ஆரம்பிக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை பலாலி வந்தடையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வானக அணியாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்கு அழைத்துவரப் படுவார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழி பாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி யாழ். ஆயர் இல்லம் சென்று ஆயர் தோமஸ் சவுந்தர நாயகத்தைச் சந்திப்பார். தொடர்ந்து யாழ்.நாகவிகாரைக்குச் செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து யாழ்.நூல கத் தில் குடாநாட்டிலுள்ள பிரமுகர்களைச் சந்தித்து இங்குள்ள நிலைமைகள் குறித் துக் கலந்துரையாடுவார்.
அதன்பின்னர் மு.ப. 11 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி முக்கிய உரையாற்றுவார்.
குடாநாட்டிலுள்ள அதிஉயர்பாதுகாப்பு வலயங்களில் இருந்து படையினரை பின் நகர்த்தும் பணிகள் நேற்று ஆரம்பமாகின என்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் பணியை வலி.வடக்கில் ஜனாதிபதி தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மீளக்குடியமர்த்தப்படவிருப்பவர்களுக்கு தற்காலிக கொட்டில்கள் அமைக்க கட்டடப் பொருள்களை நேற்று வழங்கப்பட்டுள்ளன. குடாநாட்டில் அதிஉயர்பாதுகாப்பு வல யங்களில் உள்ள தொடர் காவலரண்கள் மற்றும் தடைமுகாம்கள் இன்று முதல் தகர்க்கப்படவிருக்கின்றன என்று நம் பிக்கையாக அறியவந்தது.
வலி.வடக்கு, அரியாலை, தனங்க ளப்பு, பளை ஆகிய பகுதிகளில் அமைந் துள்ள தொடர் காவலரண்களைத் தகர்க் கும் பணி இன்று ஆரம்பிக்கப்படவிருக் கின்றன. அந்தந்தப் பணியை முன் னெடுப்பதற்காக புல்டோசர் போன்ற பாரிய இயந்திரங்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன. இந்தப்பணி பூர்த்தியடைந்ததும் அந்தப் பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த ஏற் பாடுகள் செய்யப்படும்.
Uthayan
0 விமர்சனங்கள்:
Post a Comment