வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு வழங்க சரத் பொன்சேகா இணங்கியுள்ளார்: சிவாஜிலிங்கம்
வடக்கு கிழக்கில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு ஒப்படைக்க ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயாதீன ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து அதில் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்க வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கை மூன்றாக பிரித்து மூன்று இன சமூகங்களுக்கும் தனித் தனி அலகுகளை வழங்குவதற்கு ஜெனரல் சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதனை பிரதான வேட்பாளர்கள் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தாம் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment