ஜனாதிபதியின் குடும்ப பிரசார இணையத்தளத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் வெற்றியை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட www.mahinda2010.lk என்ற இணையத்தளத்தில் ஜனாதிபதியின் குடும்பம் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றியுள்ளனர்.
இந்த இணையத்தளத்தில் ஜனாதிபதியின் மூத்தப் புதல்வர் நாமல் ராஜபக்ஸசட்டத்தரணி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இணையத்தளத்தின் ஆங்கிலப் பக்கத்தில் அவர் இங்கிலாந்தில் சட்டக் கல்வியைப் பயின்றுவருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸ இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் எனவும் அவர் கடந்த நவம்பர் மாதத்திலேயே இறுதிப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஸ சட்டக் கல்லூரி அதிபரின் விசேட அனுமதியின் அடிப்படையில் கண்ணாடி அறைக்குள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரின் பாதுகாப்புடன் பரீட்சைக்குத் தோற்றியதாகக் கூறப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment