தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோரி விடுதலைப் புலிகளின் பேரில் இனந்தெரியாத சிலர் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய இராணுவக் கட்டளைத் தளபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்தே இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தத் துண்டுப் பிரசுரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி.யினரே விநியோகித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இராணுவனத்தினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment