கொடூரமான தந்தை
கைக் குழந்தையினை அடித்துக் கொன்ற தந்தை - மீராவோடையில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பகுதியில் கைக் குழந்தையொன்றை தகப்பன் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முஹம்மட் ஜௌபர் முஹம்மட் ஸன்பர் (15 மாதம்) என்றழைக்கப்படும் கைக் குழந்தையே வீட்டின் அத்திவாரத்தில் தூக்கி அடித்து கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் இக் கைக் குழந்தையின் தகப்பனான மீராவோடை ஜும்மாப் பள்ளி வீதியைச் சேர்ந்த காசிம்பாவா முஹம்மட் ஜௌபர் (34 வயது) என்றழைக் கப்படுபவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இப் பிள்ளையில் ஒருவர் பாடசா லைக்கு செல்வதற்காக கழுத்துப் பட்டி ஒன் றினை வாங்கித் தருமாறு குறித்த தகப்பனி டம் கேட்டுள்ளார்.இவர் வாங்கிக் கொடுக்காததால் மனைவிக்கும் கணவனுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட
மனைவியின் மடியில் இருந்த குறித்த கைக்குழந்தையை தூக்கி வீட்டின் அத்திவாரத்தில் அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment