2010 தமிழ்தாய் நாள் காட்டி வசூல் மட்டும் 10இலட்சம் யூரோக்கள்- சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!!
வருடம் தோறும் ஒரு இலட்சம் தமிழ்தாய் நாட்காட்டி அச்சிடுவதும் அதன் வருமானம் சுளையாக அனைத்துலக பிரிவினரிடம் கைமாறுவதும் தெரிந்ததே. ஒரு நாட்காட்டி 10யூரோ படி விற்கப்படுவதுண்டு. இதன் செலவு தவிர்ந்து முழு இலாபமாக 10இலட்சம் யூரோக்கள் கையில காசு.
இவ்வளவு காலமும் போராட்டத்தை சாட்டி கைமாறிய பணம். இம்முறை 2010 கலண்டர் வருமானம் எங்கு சென்றது? யாரின் கையில் இந்த ஒட்டுமொத்த பணமும் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் கஸ்ரோ இளவரசர்களுக்கு மட்டும் இது தெரியும்.
கடந்த மே 18க்கு முதல் சுவிசில் எல்லா கன்ரோன்களிலும் அவசர நிதியென கேட்ட போது போராட்டத்தை காப்பாற்ற சுவிசில் பல ஆயிரம் பேர் சுவிஸ் வங்கிகளில் கடனாக எடுத்து கொடுத்த பல இலட்சம் பிராங்குகள் மாதம் மாதம் மீளளிக்க முடியாத சோகம் ஒவ்வொரு கன்ரோன்களிலும் கறையாக உள்ளது. இந்த கடன்களை திருப்பிக்கேட்டோர் அனைத்துலக மக்குகளால் துரோகிகளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 9மாதங்களாக போராட்ட அமைப்பின் பல்வேறு வருவாய் தரும் நிதி மூலங்களின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாமல் முடக்கப்பட்டுள்ளது.
மறுஆய்வு முதல் கட்டமாக ஒவ்வொரு தமிழ் தேசியத்தை மானசீகமாக ஆதரிக்கும் ஒவ்வொருவரின் வீடுகளிலும் தொங்கும் தமிழ்தாய் நாட்காட்டியின் கணக்கு கேட்பதுடன் ஆரம்பிக்கின்றோம். அனைத்துலக மட்டத்தில் போராட்ட அமைப்பின் அனைத்து நிதி வருவாய்களின் விபரங்களுடனும், உதிரிகளாக நிதி வருவாய்தரும் கடந்த 9மாத காலத்தில் ஒவ்வொரு நாடு ரீதியாக கிடைத்திருக்க கூடிய வருமான விபரங்களை மக்களுக்கு அம்பலப்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
சுவிஸ் வாழ் மக்களே முதற்கட்டமாக உங்களின் கடன்களை அடைக்க தமிழ் தாய் நாட்காட்டி வருமானத்தை கேளுங்கள். சுவிஸில் உங்களிடம் பணம் பெற்றுக்கொண்டவர்களின் வீடுகளை முற்றுகையிடுங்கள்..
மக்கள் போராட்டம் வெடிக்கட்டும் என திலிபன் எதிரிக்கு எதிராக மட்டும் சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!! சுரண்டும் வர்க்கத்துக்கும் பொருந்தும்.
மறுஆய்வு
0 விமர்சனங்கள்:
Post a Comment