தேசிய மக்குகளின் ஊடக ஜனநாயகம்
தேடகம்- டிபிஎஸ்-இளையபாரதி- CTR உடைப்பு-வரிசையில் லோகேந்திரலிங்கத்தின் உதயன் பத்திரிகை தாக்குதல் தேசிய மக்குகளின் ஊடக ஜனநாயகம்
கடைசி ஒரு புலி இருக்கும் வரை போராடுவோம் என கேட்டு புளிச்சுப்போன தேசிய மக்குகளின் கோசம் கடைசியில் என்னவாயிற்று. இந்த கேள்வியை யாராவது மே18 க்கு பின்னர் இரைமீட்டுப்பார்த்தீர்களா?
பார்த்தீர்களாக இருந்தால் 11ஆயிரம் புலிகளும் மகிந்தவின் சிங்கள படைகளிடம் சரணடைந்ததை எப்படி எடுத்துக்கொள்வது என விளக்கம் கொடுக்கும் கனவான் ஆய்வாளர்கள் மறுஆய்வுக்கு அந்த விளக்கத்தை தரவும்.
இறுதிவரை புலிகளின் குரலில் விளக்கம் தந்த, கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம் பாடல் இயற்றிய யோகி, வியட்னாம் போராட்டத்துக்கு வியாக்கியானம் கொடுத்த பாலகுமாரன், முள்ளிவாய்க்காலில் இலைக்கஞ்சி கொடுத்த இளம்பருதி( அப்போதும் நிதித்துறையின் களஞ்சியங்களில் உணவுப்பொருட்கள் தாராளமாக இருந்ததாம்),தேசியமக்கு கவி புதுவையும், மாவீரர் பணியக பொறுப்பாளர் பெண் தியாகம் சரணடையலாமென்றால்…,மக்கள் தங்களுடனேயே இருப்பதாக கூறிக்கொண்ட நடேசன், புலித்தேவன் என பல்லாயிரம் புலிப்போராளிகள் மகிந்தவின் படைகளை நம்பி சரணடைந்தது தவறு இல்லை என்றால் ……..
உண்மையில் 18ம் திகதி வரைக்கும் போராடி அல்லது சரணடையக்கூடாது அல்லது பிடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தம்மை தாமே மாய்த்துக்கொண்டவர்களுக்கு ஏன் சரணடையத்தெரிந்திருக்கவில்லை?. சற்று ஆழமாக சிந்தித்துப்பாருங்கள் மக்குகளே!!
கனடா குலா செல்லத்துரையும் , கணேஸ் சுகுமாரும் மகிந்தாவை சென்று சந்தித்துக்கொண்டது துரோகத்தனம்.
ஆனால் பிரித்தானியாவில் இருந்து சென்று மகிந்தவை சந்தித்த டில்கோ திலகராஜன் யாழ்ப்பாணத்தில் கொட்டல் கட்டுவது துரோகமில்லை. ஏனென்றால் பிரித்தானிய நிதிப்பொறுப்பாளர் தனத்தினால் சுரண்டப்பட்ட தமிழ் மக்களின் கோடிகளும் டில்கோவின் முதலீட்டில் உள்ளடங்குகிறதா? அல்லது அதன் மர்மம் என்ன?
கனடாவில் 90களின் முற்பகுதியில் தேடகம் என்ற மாற்று கருத்து நூலகத்தை எரித்தனர். பின்னர் டிபிஎஸ். ஜெயராஜின் பத்திரிகையை எரித்து தடை செய்தனர் மக்குகள். இளையபாரதி என்ற சிவசோதிக்கு அடித்தனர்.இறுதியாக தமிழ்தேசிய மக்கு தமிழ் தமது கட்டுப்பாட்டில் இருந்த கலாதரனினால் நடாத்தப்பட்ட CTR வானொலியை கஸ்ரோ சொன்னதாக கூறி இரு வருடங்களுக்குள் அத்துமீறி வானொலி நிலையத்தை துவம்சம் செய்து அங்கிருந்த பொருட்களை அபகரித்து கலாதரனை அடிபணிய வைக்க முற்பட்டனர். ஆனால் கலாதரன் புதிய வானொலியை தொடங்க வழிவகுத்தனர். இது தமிழ்தேசிய தலைமை இருக்கும் போதே நடந்த ஊடக சன நாயகம்.
தற்போது 2010 இம்முறை மட்டுமட்டாக புலியையும் ஆதரித்துக்கொண்டு தனது பத்திரிகையில் விளம்பர வியாபாரத்தை நீண்டகாலமாகவே நடத்திவந்த லோகேந்திரலிங்கத்தின் கனடா உதயன் தாக்கப்பட்டுள்ளது.
கடந்த 6மாதகாலமாக வட்டுக்கோட்டை, நாடு கடந்த அரசு, தேர்தல், ஜன நாயகம், என தேசிய மக்குகள் கூவி விற்க முற்படும் போலி ஜன நாயகம் இதுதான். எதிரியின் ஊடக அடக்குமுறை, ஊடக சுதந்திரமின்மை பற்றி வாய் கிழிய கத்துவதும் எழுதுகோல் கொண்டு எழுதும் தேசிய வித்துவான்களுக்கு கனடாவில் நடந்தது தெரியாது போலும்.
பிரான்ஸ் கிருபாகரன் கட்டாயம் அவரது மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் சேர்த்துக்கொள்வார்.
வேல்ஸ் அருஸ் தனது ஆய்வு கட்டுரையில் கண்டித்து எழுதுவார்.
இதயசந்திரம் முடிந்தால் இறுதி பந்தியில் இதனை நிரப்பிக்கொள்வார்.
ஈழநாடு பாலச்சந்திரன் தனது நாளாந்த ஆசிரியர் தலையங்கத்தில் கொண்டுவருவார்.
தமிழ் நெற் ஜெயச்சந்திரன் இந்த அரசியலுக்குள் செல்லாமல் நடு நிலையாக நாசூக்காக எங்கோ ஒரு மூலையில் எழுதுவார்.
கனடாவில் முரசொலி திருச்செல்வம் தனது தமிழர்தகவல் பெப்ரவரி ஏட்டில் பதிவுசெய்வார்.
ஆக ஊடக ஜன நாயகம் இன்னும் உள்ளது……….. நம்புவோம்.
தமிழ் தேசிய மக்குகளுக்கு சர்வதேச அங்கீகாரம் அடுத்தவருடமே கிடைத்துவிடும்.
நம்புங்கள் தாஆமீஈழாம் அடுத்த வருடம்…….
மறுஆய்வு
0 விமர்சனங்கள்:
Post a Comment