கேபியுடன் தொடர்பு என பரப்பப்படும் வதந்தி உள்நோக்கம் கொண்டது: ருத்ரகுமாரன்
திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சிஇ நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.'
இவ்வாறு இணையத்தளம் ஒன்றுக்கு (நநடயஅநநெறள.உழஅ) அளித்த செவ்வியொன்றில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் திரு விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கேள்வியொன்றிற்கு ருத்ரகுமாரன் அளித்துள்ள பதில் விபரம் பின்வருமாறு:
திரு செ. பத்மநாதன் தலைவர் அவர்களால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகள் செயலகத்தின் தலைமைப் பொறுப்பாளராக 01.01.2009 அன்று முதல் நியமிக்கப்பட்டவர்.
இவர் 05.08.2009 அன்று மலேசியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிகளுக்கு முரணான அக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கையொன்றினை விடுத்திருந்தோம்.
இவரது கைது தொடர்பாக பின்னர் வந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் எனக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
சிறிலங்கா ஊடகங்களில் அவரைப் பற்றி வரும் செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் அவர் தற்போது சிறிலங்காவின் ஓர்அரசியல் கைதி. சிறிலங்கா அரசுஇ தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று.
எனவே அவர் மட்டுமல்லஇ தமிழீழ விடுதலைப் புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக் கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து விமர்சிப்பது சுலபம்.
திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப பொறுத்த வரையில்இ நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப் பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம்.
இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 16.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து விடுத்த முன்மொழிவில்இ இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.
இவை மட்டுமன்றிஇ நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை (வசயnளியசயnஉநல ) முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப் போகிறவர்கள் திரு கேபியோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல.
இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்டஇ சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத்தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.
இவ்வாறு திரு ருத்ரகுமாரன் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment