தியாகிக்கு ஓராண்டு நினைவஞ்சலி
எத்தனை ஆயிரம் பேர் விடுதலைக்காய் உயிரைத் தியாகம்
செய்தார்கள். யாராலும் கிடைக்காத விடுதலை
உன் தியாகத்தால் கிடைத்ததே!
நீ உயிர் துறந்த நேரத்தில் போர் நின்று போனதே.
எத்துணை தியாகம்.
சரணடைய வேண்டாம். சரணடைந்தால் இராணுவம்
சித்திரவதை செய்யும். பெண் போராளிகள் கற்பழிக்கப்படுவார்
கள். யாரும் சரணடையாமல் சயனைட்டைக் கடியுங்கள்.
அல்லது குண்டை வெடிக்க வையுங்களென்று உன்னுடைய
போராளிகளுக்குக் கற்றுக் கொடுத்த நீ எப்படிப்பட்ட
சித்திரவதையானாலும் அதனை எதிர்கொள்ளத் துணிந்து
இராணுவத்திடம் சரணடைந்தாயே அதுவல்லவோ தியாகம்.
நீ முள்ளி வாய்க்காலில் சிந்திய ரத்தம் எத்தனை ஆயிரம்
மக்கள் இனிமேல் குருதி சிந்துவதை நிறுத்தியதே!
தவப் பெருந்தலைவனே நீ உயிருடன் இருந்தபோது உன்
பெயரைச் சொல்லி லட்ச லட்சமாய்ச் சேர்த்த உன்னுடைய
பினாமிக் கூட்டம். உனக்காய் அஞ்சலி செலுத்த மறந்துவிட்
டார்களே.
விதுசாவிற்கும், துர்க்காவிற்கும், கேணல் தீபனுக்கும்
இறுவட்டு வெளியிடுகிறார்களே! ஆனால் உனக்காய் ஒரு
சிறுவட்டுக்கூட வெளியிட மறந்துவிட்டார்களே!
இன்று வெடிகுண்டுகளின் ஓசை இல்லையே!
கிளை கிளையாய் வெடித்த கிளேமோர்க் குண்டுகளில்லையே!
மக்கள் கூடுமிடங்களெல்லாம் சதைத்துண்டங்களாய்
சிதறியழித்த கரும்புலி மனித வெடிகுண்டுகளில்லையே!
வரி என்று சொல்லி மக்களின் உழைப்பை கப்பமாய்
உறிஞ்சியதும் நின்று போனதே!
புலிமாமா இனிக் கடத்தமாட்டாரென்று பிள்ளைகள்
மகிழ்ச்சியாய் பாடசாலை செல்கிறார்களே!
30 வருடங்கள் மக்கள் பூட்டி வைத்திருந்த உணர்வுகளை
இன்று கொட்டுகிறார்களே!
வடக்கு கிழக்கெங்கும் ஜனநாயகம் மலர்ந்து சுதந்திரமாய்
தேர்தல் நடைபெற்றதே!
மக்கள் இன்று மகிழ்ச்சியுடன் நாட்டின் எந்த மூலைக்கும்
சென்று வருகிறார்களே!
இவையெல்லாம் எப்படி சாத்தியமானது.
நீ செய்த உயிர்த் தியாகத்தினால் தானே!
உன் உயிரைத் தியாகம் செய்து நாட்டு மக்களின் முப்பது
வருடச் சித்தரவதை முடித்து வைத்தவனே! இருந்தாலும் எங்
களக்கு ஒரு நப்பாசை முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம்
சரணடைந்த நீ 87ம் ஆண்டே வடமராடசியில் சரணடைந்
திருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்
கும்.
இருந்தாலும் இன்றாவது நீ சரணடைந்து உன்னைத் தியாகம்
செய்ததற்காய் எமது அஞ்சலியைத் தெரிவிக்கிறோம்.
ஈழநாசம்
0 விமர்சனங்கள்:
Post a Comment