10 நிமிடங்களில் 45 "பீஸா' களை விழுங்கி அமெரிக்க இளைஞர் சாதனை
10 நிமிடத்தில் 45 "பீஸா' துண்டுகளை அநாயசமாக விழுங்கி உலக பீஸா உண்ணும் போட்டியில் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளார்.
மேற்படி உலகப் பிரபல பீஸா உண்ணும் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றது. கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் (24 வயது) மேற்படி போட்டியில் கலந்துகொள்வதற்கு தயாராக ஒரு நாளுக்கும் அதிகமான காலம் எதுவித உணவையும் உட்கொள்ளாமல் பட்டினி கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விழுங்குவதற்கு இலகுவாக பீஸா துண்டுகளை மடித்து அவர் உண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற "ஹொட்டோக்' உணவு அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 10 நிமிடங்கள் 59 "ஹொட்டோக்ஸ்' உணவுகளை இவர் விழுங்கியிருந்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment