விமானநிலைய பரிசோதனைகளுக்காக பாதணிகளை கழற்றும் நிர்ப்பந்தத்திற்கு முடிவுகட்டும் இஸ்ரேல்
விமான நிலையங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை கண்டறிவதற்கான "எக்ஸ்ரே கதிர்' பரிசோதனைக்காக தமது காலணிகளைக் கழற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிவரும் பயணிகளுக்கு கை கொடுக்கும் வகையில், இஸ்ரேலிய விமான நிலையமொன்று புதிய தொழில்நுட்ப உபகரணமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்படி புதிய ஊடுகாட்டும் உபகரணமானது, பாதணி களைக் கழற்றாமலே பயணிகள் ப?சோதனைக்கு உட்பட வழிவகை செய்கிறது.
பென்கூரியன் விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உபகரணத்தைப் பயணி ஒருவர் கடந்து செல்கையில், அப்பயணியிடம் கத்தி மற்றும் வெடி குண்டுகள் என்பனவற்றில் பயன்படுத்தப்படுவதையொத்த வழமைக்கு மாறான உலோகங்கள் இருப்பின் இரு செக்கன் களுக்குள் அது தொடர்பான எச்சரிக்கையை மேற்படி உபகரணம் வழங்கும்.
இந்த உபகரணமானது விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனைகளின் போது பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியத்தை நீக்குவதுடன் நேர விரயத்தையும் குறைப்பதாக இஸ்ரேலிய விமான அதிகார சபையின் பாதுகாப்பு தொழில்நுட்ப முகாமையாளர் நிஸிம் பென் எஸ்ரா தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment