பராக் ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாதது உண்மையிலேயே அதிசயம்
கியூபா முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோ
ஹவானா
இனவாதம் மிக்க அமெரிக்க சமூகத்தில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா இதுவரை படுகொலை செய்யப்படாமல் இருப்பது உண்மையிலேயே அதிசயமாகும் என கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.
"கியூபாடிபேட்' வெப்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
""அமெ?க்காவிலுள்ள மில்லியன்கணக்கான வெள்ளையர்கள், கறுப்பு இனத்தவர் ஒரு வரும் அவரது மனைவி பிள்ளைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்வதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இல்லை.
ஏனெனில் அவர்கள் இனத் துவேஷம் காரணமாகவே ஜனாதிபதி மாளிகைக்கு "வெள்ளை' என்ற அடைமொழியை சேர்த்துள்ளார்கள்'' என குறிப்பிட்ட பிடெல் காஸ்ட்ரோ, அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கறுப்பு இன அரசியல்வாதியான பராக் ஒபமா தெரிவு செய்யப்பட்டிருப்பதும் இன்னும் அவர் படுகொலை செய்யப்படாமல் இருப்பதும் உண்மையிலேயே அதிசயமானதாகும்'' எனக் கூறினார்.
அத்துடன் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் கடற்படையில் பணியாற்றிய போது பெற்றிருந்த குறைந்த தராதரம் குறித்து சாடிய பிடெல் காஸ்ட்ரோ, ""அக்கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளரான சாரா பாலினுக்கு எதைப் பற்றியும் ஒன்றும் தெரியாது'' என குற்றஞ்சாட்டினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment