மனைவியை சுமந்து ஓடும் போட்டி நியூ ஹாம்ஷியர் ஜோடி வெற்றி
ஒன்பதாவது வருடமாக வட அமெரிக்காவில் இடம்பெற்ற மனைவியைச் சுமந்து ஓடும் வெற்றிக் கிண்ணப் போட்டியில், நியூ ஹாம்ஷியரைச் சேர்ந்த றி பஹ்னெஸ்டொக் சாரா சில்வர்பேர்க் ஜோடி வெற்றிவாகை சூடியுள்ளது.
"றிவர் கி' விடுமுறை வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில் வெற்றியீட்டிய இந்த ஜோடிக்கு, மனைவியான சாரா சில்வர்பேர்க்கின் நிறையிலும் 5 மடங்கான பணப் பரிசு (610 டொலர்) வழங்கப்பட்டது.
மேற்படி ஜோடி பின்லாந்தில் நடைபெறவுள்ள மனைவியை சுமந்து ஓடும் உலகளாவிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment