'திருமணம் செய்யாதது தான் 105 வயது வாழும் ரகசியம்' :சாதனை படைத்த பெண் கூறுகிறார்
பிரிட்டனை சேர்ந்த பெண் கிளாரா மெட்மோர், தன் 105 வது பிறந்தநாளை சமீபத்தில் கொண் டாடினார்; "நான் திருமணம் செய்யாமல் இருந்தது தான் இவ்வளவு காலம் உயிர் வாழ காரணம்' என்று வித்தியாசமான ரகசியத்தை உடைத்தார் இவர். கிளாஸ்கோ மாகாணத்தில் பிறந்தவர் இவர். ஆனால், கனடா, நியூசிலாந்து நாடுகளில் வசித்து பின், நாற்பது ஆண்டுக்கு முன் பிரிட்டனில் குடியேறினார். இதுவரை இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.
தன் வாழ்நாள் ரகசியம் குறித்து கிளாரா கூறியதாவது:நான் எப்போது ஏதாவது வேலை செய்தபடி இருப்பேன். எனக்கு யாருடைய துணையும் தேவைப்பட்டதாகவே இது நாள் வரை தோன்றியது இல்லை. எனக்கு ஆண் நண்பர்கள் உண்டு. ஆனால், நட்பை தாண்டி சிந்தித்ததே இல்லை; அதுபோல, செக்ஸ் உறவு பற்றி நினைத்துப் பார்த்ததே இல்லை.இளம்பெண்ணாக இருந்தபோது பலரும் என்னை வலியுறுத்தினர்; ஆனால், திருமணத்தில் நாட்டம் இல்லை என்று மறுத்துவிட்டேன். இப்போது தனியாக இருந்தாலும், எனக்கு அது பெரிதாகவே தோன்றவில்லை.
சமைப்பது, தோட்டத்தை அழகுபடுத்துவது, படிப்பது தான் இவரின் அன்றாட வேலை. எப்போதும் ஏதாவது ஒன்றை செய்தபடி இருப்பார். எதிலும் சளைத்ததே இல்லை. தனியார் நிறுவனத்தில் அதிகாரி பணியில் இருந்தவர் இவர். தன் சம்பளத்தை சேமித்து வந்தார். நடந்தே பல இடங்களுக்கு சுற்றுலா செல்வதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். அப்போதெல்லாம் பணத்தை தாராளமாக செலவழிப்பார்.இத்தனை ஆண்டுகள் வாழ்கிறேன் என்றால், ஆண்களை அண் டாமல் வாழ்ந்ததும் தான் முக்கிய காரணம். திருமணம் செய்யாமல் இருந்ததால் தான், என்னால், இத்தனை நாள் வாழ முடிகிறது என்றும் சொல்ல முடியும்.இவ்வாறு கிளாரா கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment