ரூ.1.8 லட்சம் கோடியில் துபாயில் 1 கி.மீ. உயர கட்டிடம்
துபாய், அக். 7: உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெயரைப் பெறப் போகும் `புர்ஜ் துபாய்´ கட்டிடமே இன்னும் திறக்கப்படவில்லை. அதற்குள், அதன் சாதனையை மிஞ்சும் வகையில் ஒரு கி.மீ. உயரத்துக்கு 200 மாடி கட்டிடம் கட்டும் திட்டத்தை துபாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
துபாய் அரசுக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனமான துபாய் ஹோல்டிங்கின் துணை நிறுவனம் நகீல். கட்டுமான நிறுவனமான அது, `நகீல் ஹார்பர் அண்ட் டவர்´ என்ற பெயரில் விண்ணை முட்டும் கட்டிட திட்டத்தை நேற்று முன்தினம் அறிவித்தது. ரூ.1.8 லட்சம் கோடி செலவில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துபாய் இளவரசர், ஹாலிவுட் நடிகை கேத்ரீன் ஜேட்டா ஜோன்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர். துபாயில் இப்போது கட்டப்பட்டு வரும் Ôபுர்ஜ் துபாய்Õ கட்டிடம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் திறக்கப்பட உள்ளது. அப்போது உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை அது பெறும். அதை எம்மார் பிராப்பர்டீஸ் நிறுவனம் கட்டுகிறது. அதன் உயரம் பற்றி அந்நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எனினும், அது 900 மீட்டர் உயரம் இருக்கும் எனத் தெரிகிறது.
துபாயில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு கி.மீ. உயர கட்டிடம் 270 ஏக்கர் பரப்பில் அமையப் போகிறது. அது திறக்கப்பட 10 ஆண்டுகள் பிடிக்கும் எனத் தெரிகிறது. அதில் அமையும் அலுவலகங்களில் 45,000 பேர் பணிபுரியலாம். அங்கு ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் வந்து செல்வார்கள். மொத்தம் 2.5 லட்சம் சதுர மீட்டர் பரப்புக்கு ஓட்டல்களும், வரவேற்பரைகளும் இடம்பெறும். 1 லட்சம் சதுர மீட்டருக்கு கடைகள், ஷோரூம்கள் இருக்கும். பூங்காக்கள், தோட்டங்களுக்கு அதிக இடம் ஒதுக்கப்படும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment