உடலில் கத்தியால் குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன்
கோவையில் தேவாங்க சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, உடலில் கத்தியால் குத்தி, ரத்தம் சொட்டச் சொட்ட சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். கோவை, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும், நவராத்திரி விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.
தேவாங்க சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஆண்டு தோறும் விஜய தசமியன்று, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு, நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், உடலில் கத்தியால் குத்தி, காயத்தை ஏற்படுத்தினர். பின், தெலுங்கு மொழியில், "வேசுக்கோ, தீசுக்கோ' என்று கோஷம் எழுப்பியவாறு, ரத்தம் சொட்டச் சொட்ட ஊர்வலமாக, ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலை அடைந்தனர். இளைஞர்கள் ஒவ்வொருவரும் பெரிய கத்திகளால் தங்களது தோள்பட்டைக்கு கீழ், கைப்பகுதியில் வெட்டிக் கொண்டனர். கைகளில் கத்தி பட்டு ரத்தம் சொட்டிக் கொண்டே இருந்தது. ரத்தம் வரும் இடங்களில், மஞ்சள் பூசப்பட்டு, ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்தினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment