மார்புக்கு வெளியே இதயம்: பெண் சிசுவால் அதிர்ச்சி
மார்பு எலும்பு முழுமையாக வளர்ச்சியடையாமல், மார்புக்கு வெளியே இதயம் தெரியும் வகையில், மதுரையில் பிறந்த பெண் குழந்தையைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜசேகர்(27) கொத்தனராக உள்ளார். இவரது மனைவி நதியா(24). ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்பது மாத கர்ப்பிணியான நதியாவுக்கு, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. முனிசாலை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மார்பு எலும்பு வளர்ச்சியடையாத நிலையில், மார்புக்கு வெளியே இதயம், கல்லீரல் தெரியும் வகையில் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மதுரை அரசு தீவிர சிசு நலப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் கூறியதாவது : இதுபோன்று குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பது அரிது. கர்ப்ப காலத்தில் தவறான மருந்துகளை உட்கொண்டிருந்தால் இதுபோன்ற பாதிப்புகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. கர்ப்பம் தரித்தது முதல் தொடர் பரிசோதனைக்கு நதியா வரவில்லை. ஸ்கேன் செய்து பார்த்திருந்தால் அப்போதே இந்த பாதிப்பை கண்டறிந்திருக்கலாம். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment