கோவாவில் தங்கியுள்ள ஜெர்மன் சிறுமிக்கு பாலியல் தொல்லை
பனாஜி, அக். 13: ஜெர்மன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவா அமைச்சர் மகன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புகாரை பதிவு செய்ய போலீசார் மறுப்பதாக அந்த பெண்ணின் தாயார் குற்றம்சாட்டினார்.
ஜெர்மனை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் பெடலா பக். மொழி பெயர்ப்பாளரான இவர், கடந்த 13 ஆண்டுகளாக கோவாவில் தங்கியுள்ளார். அவருடன் 14 வயது மகளும் வசிக்கிறாள். இந்த நி¬¬யில் பெடலா நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
எனது மகள் பள்ளியில் படிக்கிறாள். அவளுடன் கோவா அமைச்சரின் 21 வயது மகன் ரோகித் மான்செராட்டே முதலில் நட்பு ரீதியாக பழகினான். பிறகு பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவளை துன்புறுத்தினான். அவன் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் புகாரை பதிவு செய்யவே இல்லை. பதிலுக்கு புகாரை வாபஸ் பெறும்படி என்னை மிரட்டுகிறார்கள். ரோகித்தின் தாயார் (அமைச்சரின் மனைவி) 2 பெண்களுடன் என்னிடம் வந்து வழக்கை வாபஸ் பெறும்படி வற்புறுத்தினார். என் மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வேண்டும். இவ்வாறு பேட்டியில் பெலடா கூறினார்.
இந்த சம்பவம் பற்றி உதவி போலீஸ் சூப்பிரெண்டு தலைமையில் விசாரணை நடப்பதாக போலீசார் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தனர். சர்ச்சைக்குள்ளான அமைச்சரின் மகன் எம்.பி.ஏ. படிக்கிறான்.
0 விமர்சனங்கள்:
Post a Comment