குடலில் பாதிப்பு கண்டுபிடிப்பு அமிதாப் பச்சனுக்கு தீவிர சிகிச்சை
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்தி மெகாஸ்டார் அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய வேண்டி உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் நேற்று அவருடைய ரசிகர்கள் சார்பில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
அமிதாப் பச்சனுக்கு நேற்று முன்தினம் 66வது பிறந்தநாள். அதிகாலையில் இருந்தே கடுமையான வயிற்றுவலியால் அவர் அவதிப்பட்டார். இதனால் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரு க்கு இசிஜி, ரத்தப்பரிசோதனை என்று அனைத்து சோதனைகளையும் டாக்டர்கள் செய்தனர்.
முதல்கட்ட சோதனையில் அவருடைய குடலில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவருக்கு பல்வேறு சோதனைகளை செய்ய முடிவு செய்துள்ளனர். அமிதாப்புக்கு கடந்த 2005ல் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது மீண்டும் குடல் பகுதியில் அவருக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
லீலாவதி மருத்துவமனையில் முதலில் அறை எண் 1106ல் அமிதாப் சேர்க்கப்பட்டார். இது பணக்கார நோயாளிகள் அறை. இதில்தான் அமிதாப்பின் தாயார் தேஜி முன்பு சிகிச்சை பெற்றார். ஆனால், அவர் அங்கு இறந்தார். எனவே, தனக்கு அறை எண் 1101ஐ ஒதுக்கப்படும் படி அமிதாப் கேட்டுக் கொண்டதால், அங்கு மாற்றப்பட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment