முற்றுப்புள்ளியாகும் ரஜனியின் சுக்கிரதிசை?
"நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...'' 22 ஆண்டுகளுக்கு முன் ரஜனிக்காக ஒலித்த இந்த குடு குடுப்பைக் குரல் இவ்வாண்டோடு முடிவுக்கு வருகிறதாம்.
பெங்களூரில் சாதாரண பஸ் கண்டக்டராக நகர்ந்த ரஜனி என்ற சிவாஜிராவின் வாழ்க்கை வண்டி, சென்னை விஜயத்திற்கு பிறகு திசை திரும்பியது.
திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்த ரஜனி, நண்பர்களுடன் ஒரு தேநீருக்காக சிரமப்பட்ட காலமெல்லாம் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாரின் மனதில் பட்டுப்போகாமல் இருக்கும் நினைவுகள்தான்.
இப்படி ரஜனியை துரதிஷ்டம் துரத்தியதெல்லாம் சில காலம்தான். ஆனால், பாலச்சந்தர் என்ற மனிதரை சந்தித்த பிறகு ரஜனிக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் நிறைய.
இதனை தனது உழைப்பாலும் திறமையாலும் ரஜனி தக்க வைத்துக் கொண்டது உண்மை என்றாலும் அவருக்கு சுக்கிரதிசை என்ற நல்ல நேரமும் கைகொடுத்ததும் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
தொட்டதெல்லாம் பொன்னாக ஆரம்பித்தது சுக்கிர திசை வந்த பிறகே என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படி ரஜனியை சுக்கிரதிசை சுற்றி வந்த இந்த 22 வருடங்களில் ரஜனி ருசித்த வெற்றிகள்.
ஆனால் இந்த ஆண்டுடன் ரஜ னியின் சுற்றுப் பாதையிலிருந்து விலகிக் கொள்கிறானாம் சுக்கிரன்.
இதனை நம்பாமல் வாய்பொத்தி சிரிப்ப வர்களில் நாமும் ஒருவர் என்றாலும் இது தான் நிஜம் என கண் சிவக்கின்றனர் ஜோ திட சக்கரவர்த்திகள்.
இதற்கு சாட்சியாக அவர்கள் சொல்லும் சமீபத்திய சம்பவங்களும் நம்மை யோசனையில் மூழ்க வைக்கிறது. "குசேலன்' படுதோல்வி, ரசிகர்கள் அதிருப்தி, ரஜனி கட்டளையையும் மீறி அவரது ரசிகர்கள் கட்சி ஆரம்பித்த சம்பவங்கள் என பலவும் சுக்கிரதிசை செய்திக்கு பாலம் போடுகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment