கொலம்பியாவில் "ஒபமா' அதிர்ஷ்ட இலாப சீட்டுகளுக்கு பெரும் வரவேற்பு
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதி பதி வேட்பாளர் பராக் ஒபாமாவின் உருவப் படம் பொறிக்கப்பட்ட அதிர்ஷ்ட இலாபசீட்டுகள், கொலம்பிய மெஸா நகரில் அறிமுகப்படுத்தப்பட்டு பரபரப்பாக விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
""நாம் எமது அதிர்ஷ்ட இலாப சீட்டிற்கு ஒபமாவின் உருவப்படத்தை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அவர் மக்களின் ஆர்வத்தைத் தூண்டுப வராக உள்ளதாலாகும். அவர் கருத்து கணிப்பு வாக்கெடுப்புகளில் முன்னணியிலுள்ளதுடன் இங்கு மிகவும் பிரபலம் பெற்ற ஒருவராகவும் உள்ளார்'' என மெஸா நகர பரிசுச் சீட்டிழுப்பு முகாமையாளர் லூயிஸ் என்சிஸோ தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபமாவின் உருவப்படத்தைக் கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டுகளுக்கு கொலம்பியாவில் பெரும் வரவேற்பு நிலவுவதாக அவர் கூறினார்.
""நாங்கள் அமெரிக்க குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மக்கெயினின் உருவப்படத்தை பயன்படுத்த ஒரு போதும் நினைக்கவில்லை'' என அவர் குறிப்பிட்டார்.
""ஜோன் மக்கெயின் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அச்சாக, மகிழ்ச்சியை ஏற்படுத்தாதவராக, பொறுமை இழக்க வைக்கும் ஒருவராக விளங்குகிறார்'' என அவர் மேலும் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment