இலங்கைப் பிரச்சனையில் எழும் விபரீத கோஷங்கள்
வரலாற்று ரீதியாகவும் மனித உறவுகள் அடிப்படையிலும் இலங்கைத்தமிழ் மக்களின் நிலைமை குறித்து இந்தியா - குறிப்பாகத் தமிழகம் - அக்கறை கொள்வது இயற்கையானதே. அந்த வகையில், அண்மை நாட்களாக இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள்அமைப்புக்கும் இடையேயான மோதல் முற்றிவரும் பின்னணியில், இதில் அப்பாவித் தமிழ்மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவது குறித்துத் தமிழ்நாட்டின் அரசியல்இயக்கங்கள் பலவும் ஒருமித்துக் குரல் எழுப்பின. இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும்; அதை மறுத்துத் தொடரப்படும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்; அப்பாவித் தமிழ் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தவிர்க்கப்படவேண்டும்; அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் நீட்டிக்கப்பட வேண்டும்; இந்தத் திசையில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் செலுத்த வேண்டும் என்பதே அந்தஒருமித்தக் குரல். அக்டோபர் 14, 2008 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள்கூட்டத்தின் தீர்மானம் இந்த உணர்வையே பிரதிபலிக்கிறது. ஆனால், இங்குள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர், தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மாறாக, விடுதலைப்புலிஆதரவுக்கருத்துக்களைக் கூறிவருவது கவலைக் குரியது.
தனித் தமிழ் ஈழத்தைஅங்கீரிப்பது ஒன்றே தீர்வு என்றும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் துரோகிகள்என்றும் சிலர் பேசியுள்ளனர். தனித் தமிழ் நாடு கோரிக்கையே கூட எதிர்காலத்தில் எழும்என்றும் குரல் எழுந்துள்ளது. இன்னும் சிலர், இந்திய அரசியலிலும் சமுதாயத்திலும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தும்தொனியில் பேசியிருக்கிறார்கள். இதுவெல்லாம் வெறும் உணர்ச்சிப் பெருக்கால் வரும்பேச்சா அல்லது உள்நோக்கம் கொண்ட பேச்சா என்ற ஐயம் வலுவாகஎழுகிறது. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்கு இந்தியா வற்புறுத்தவேண்டும் என்பது சரி. ஆனால், போர் நிறுத்தம் என்றால் அது ஒரு கை ஓசையாக இருந்துபயனில்லை. இரு தரப்பினருமாகத்தான் போர் நிறுத்தத்தைச் செயல்படுத்த முடியும். எனவே இந்தக் கோரிக்கை விடுதலைப்புலிகளை நோக்கி வைக்கப்படுவதாகவும் இருக்கவேண்டும். தமிழ் மக்கள் பாதிக்கப்படலாகாது என்பதிலும் புலிகளுக்குப்பொறுப்பிருக்கிறது. ஆனால் கிளிநொச்சிப் பகுதியில், தாக்குதலுக்கு இலக்காகக் கூடியவட்டாரங்களில் இருக்கிற தமிழ்மக்கள் வெளி யேற இயலாமல் அரண் எழுப்பியுள்ளதோடு, தங்கள் பகுதிகளுக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகளால் தடுக்கப்படுகிறார்கள் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி கூறினார் என்று வந்துள்ள செய்திகள் கவனத்திற்குரியவை. எனினும், தமிழகத்தில் வரம்பு மீறியபேச்சுக்களும் விபரீத கோஷங்களும் எழுவது இலங்கையில் தாக்குதலுக்கு இலக்காகும்தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண உதவாது; மாறாக நிலை மையை மேலும்சிக்கலாக்கவே வழிவகுக்கும் என்பது நிச்சயம். சென்னையில் நடந்த அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் சிலர் இதே போல் கூட்டத்தின் விவாத வரம்பைத் தாண்டிப் பேசமுயன்றபோது முதலமைச்சர் தலையிட்டு அவ்வாறு பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதும், சகோதர யுத்தத்தால் பாழ்பட்டோம் என்பதை நினைவு கூர்ந்து விடுதலைப் புலிகளால்கொல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களது பெயர்களைப் பட்டியலிட்டதும் நினைவில்கொள்ளத்தக்கது. இந்தியா, தனது அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகளில் தலையிடுவது என்பது, அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கத் தவறும்வகையில் இருக்கக்கூடாது. இந்தப் புரிதலோடு முன்வைக்கப்படும் கருத்துக்களும்ஆலோசனைகளுமே இலங்கையில் அரசியல் தீர்வு உருவாகவும், தமிழ்மக்களின் நலன்கள்பாதுகாக்கப் படவும் உதவுவதாக அமையும்.
நன்றி : தீக்கதிர்
0 விமர்சனங்கள்:
Post a Comment