கார்களைச் செலுத்தும் போது வரும் தொலைபேசி அழைப்புகளை தன்னிச்சையாக தடை செய்யும் உபகரணம்
வாகனங்களைச் செலுத்தும் போது சாரதிகள் கையடக்க தொலைபேசியை உபயோகிப்பதால் ஏற்படும் பாதக விளைவுகளைத் தடுக்கும் வகையிலான புதிய மென்பொருள் உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உபகரணமானது வாகனம் நகர்கையில் அதன் சாரதிக்கு வரும் கையடக்க தொலைபேசி அழைப்புகளையும் குறுஞ் செய்திகளையும்தன்னிச்சையாக தடை செய்கிறது.
வாகனம் செலுத்தும்போது கையடக்க தொலைபேசியை உபயோகிக்கும் சாரதிக ளுக்கு அதை உபயோகிக்காதவர்களை விட விபத்து ஏற்படும் ஆபத்து 5 மடங்கு அதிகம் என "விபத்து தடுப்புக்கான ரோயல் சபை' என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் நியூயோர்க் மற்றும் கலிபோர்னியா உட்பட அநேக மாநிலங்களில் வாகனம் செலுத்தும் போது கையடக்க தொலைபேசிகளை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டள்ளது. எனினும், "புளூடூத்' தொழில்நுட்ப செவிப்பன்னித் தொகுதிமூலம் கைகளை உபயோகிக்காமல் தொலைபேசியை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறு கைகளைப் பயன்படுத்தாமல் தொலைபேசியை பயன்படுத்துவதால், வீதி விபத்துகள் தொடர்பான பாதிப்புகள் குறையவில்லை என அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment