‘தங்கமான’ அழகி
லண்டன்: தங்கமான பொண்ணுப்பா என சொல்வதை கேட்டிருப்போம். நிஜமாகவே தங்கத்தில் விளம்பர மாடல் அழகி சிலையை வடிவமைத்து இருக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த மார்க் குவின்.
பிரபல விளம்பர மாடல் கேட் மாஸின் சிலையை தங்கத்தில் வடித்துள்ளார் இவர். இதற்காக 50 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பண்டைய எகிப்து காலத்துக்கு பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு தங்கம் பயன்படுத்தி ஒரு சிலை செய்யப்பட்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிலை லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இது போன்ற பல சிலைகள் அணிவகுக்கின்றன. ஜனவரி 25ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment