ஐக்கிய அரபு எமிரேட்டில் முதல் பெண் நீதிபதி
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்டில் முதல் முறையாக பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்டில் இதுவரை பெண்கள் நீதிபதியாக இருந்தது இல்லை. தற்போது குலூத் அகமது ஜவான் அல் தகெரி என்ற பெண், நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார். விரைவில் அவர் பதவியேற்கவுள்ளார். இதுகுறித்து, அந் நாட்டின் அதிபர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஷேக் மன்சூர் கூறுகையில், "முதல் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்டில் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளது, தனிச் சிறப்பு வாய்ந்த அனுபவமாக இருக்கும். அவருக்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் தேவைகளை அமைச்சரவை செய்யும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு' என்றார்.
அல் தகெரி கூறுகையில், "நான் நீதிபதியாக பதவியேற்பது, ஐக்கிய அரபு எமிரேட்டில் பெண்கள் பொதுவாழ்வுக்கு வருவதற்கு முன்னுதாரணமாக விளங் கும். நாட்டுக்காக சேவை செய்ய முழு முயற்சியையும் மேற் கொள்வேன்' என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment