தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஸ்ரான்லி வீதியில் உள்ள கூட்டணித் தலைமையகத்தில் பொது மக்களுடன் கலந்துரையாடல்
”தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்தியாவினுடைய அரசியல் யாப்பை பின்பற்றி அரசியல் தீர்வு கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும் . இதனை நான் பல தடவைகள் அரசிற்கு வலியுறுத்தியுள்ளதுடன் இதற்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்” மேற் கண்டவாறு தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்த சங்கரி குறிப்பிட்டார் .
இன்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையகத்தில் பொது மக்களுடனான கலந்துரையாடல் சங்கையா தலைமையில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் என சுமார் ஆயிரத்திறகும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
யாழ் குடாநாட்டின் நிலமை இந்தளவுக்கு சீர்கெடக் காரணமாக இருந்தவர்கள் யார் என பொது மக்களின் மனச் சாட்சிக்குத் தெரியும். இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் கடத்தல்கள், கொலைகள், காணாமல் போதல் ஆகியவற்றின் பின்னனியில் யார் உள்ளார்கள் என்பதை பொது மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் கண்டுபிடிக்க முடியும்.
இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெறும் களவுகள், கடத்தல்கள், கொலைகள், காணாமல் போதல் போன்ற விடயங்களை எனக்கும் அறியத் தருவதன் மூலம் என்னாலான உதவிகளை செய்வதுடன் உரியவர்களை கண்டு பிடித்து சட்டத்தின் முன்னர் நிறுத்த நடவடிக்கையெடுக்கவும் உதவி செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார்.
மற்றும் முன்னாள் யாழ் மாநகரசபைத் முதல்வர் க. கந்தையன், முன்னாள் உடுவில் கிராம சபைத் தலைவர் முத்துலிங்கம், வலி வடக்கு பிரதேச சபை முன்னாள் தலைவர் திருமதி பாலாம்பிகை ஸ்ரீபாஸ்கரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி யாழ் மாவட்டப் பொறுப்பாளர் மோகன் உட்பட மற்றும் பலர் உரையாற்றினார்கள்
0 விமர்சனங்கள்:
Post a Comment