"ஆசிய முக அழகி" மரணம்
ஆசியாவின் முக அழகியாக முடி சூட்டிக் கொண்ட சாஹர் டாப்தரி (Sahar Daftary) (23 வயது) வடமேற்கு இங்கிலாந்திலுள்ள கிரேட்டர் மான் செஸ்ட்டரிலுள்ள ஆடம்பர 12 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து மரணமானார்.
லண்டனைச் சேர்ந்த சாஹர் டாப்தரி (23 வயது), தான் உயிருக்குயிராக நேசித்த காதலர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து மனமுடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Sahar Daftary அவரின் முன்னாள் காதலர் Rashid Jamil உடன்
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆசிய முக அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற டாப்தரி அன்றைய தினம் காலை இடம்பெற்ற அலங்கார நிகழ்ச்சியொன்றில் உடல் நலமில்லை எனக் கூறி கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
அவரது மரணம் தொடர்பில் அவரது நண்பரான அப்ராஹ் சமி விபரிக்கையில், ""அவர் வாழ்வை மிகவும் நேசித்தார். எதிலும் அவர் நடுநாயகமாக திகழ்ந்தார். அவர் மான்செஸ்டரில் அவரது காதலரை சந்தித்தார். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ஆசிய முக அழகியாக தெரிவு செய்யப்பட்ட போது உலகமே தனது காலடிக்கு கீழே இருப்பதுபோன்ற உணர்வில் அவர் இருந்தார். ஆனால், தனது காதலர் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்தது முதற் கொண்டு, அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மன அழுத்தத்துக்கு உள்ளாகி சரியாக உண்ணக் கூட முடியாமல் அவர் இருந்தார்'' என்று தெரிவித்தார்.
தாப்தாரியின் மரணத்தையடுத்து, அவரது காதலர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சாஹர் டாப்தரியின் மரணம் தொடர்பான விசாரணைகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment