பிரான்ஸின் முதலாவது பெண் விண்வெளிவீரர் தற்கொலை முயற்சி
விண்வெளிக்கு சென்ற முதலாவது பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியும் முன் னாள் அமைச்சருமான கிளவ்டி ஹெய்க்னர் (Claudie Haignere) தற்கொலை முயற்சியொன்றையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரிஸிலுள்ள அவரது வீட்டில் அளவுக்கதிகமான மாத்திரைகளை உண்டு நினைவிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட ஹெய்க்னர் (51 வயது), உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டு விண்வெளிநிலையமான "சி.என்.ஈ.எஸ்.' இல் விண்வெளிவீரராக பணியாற்றிய ஹெய்க்னர், 1996 ஆம் ஆண்டு "எம்.ஐ.ஆர்.'விண்வெளிநிலையத்துக்கும் 2001ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் பயணத்தை மேற்கொண்டார்.
அத்துடன் அவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணித்த முதலாவது ஐரோப்பிய பெண் என்ற பெருமையையும் பெறுகிறார்.
அரசியலில் பிரவேசம் செய்த ஹெய்க்னர், 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதற்கொண்டு 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் அமைச்சராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு மே மாதம் வரை ஐரோப்பிய விவகார அமைச்சராக சேவையாற்றினார்.
1993 ஆம் மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் "எம்.ஐ.ஆர்.' விண்வெளிநிலையத்துக்கு பயணித்த பெருமைக்கு?ய பிரான்ஸ் விண்வெளிவீரரான ஜீன் பியரே ஹெய்க்னரே அவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment