புத்தாண்டு தினத்தன்று கொழும்பில் புலிகள் அதிரடித் தாக்குதல்
வெளிநாட்டுப் புலனாய்வுத்துறை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்குத் தகவல்
(லங்கா ஈ நியூஸ் டிச-24, 2008. பி.ப 01.15)
புத்தாண்டு தினப் பிறப்பின் போது பட்டாசு கொளுத்தும் சமயத்தில் கொழும்பில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாகப் வெளிநாட்டுப் புலனாய்வுத் துறையொன்று இலங்கை அரசுக்கு அறிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது.
கொழும்பின் அதிகாப்புப் பிரதேசங்களில் தாக்குதல்களை மேற்கொள்ளவும் அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கடத்தி அதன் மூலம் பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் நுழைந்து பாரிய தாக்குதல்களை நடத்தவும் தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டம் வகுத்துள்ளமை குறித்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த வெளிநாட்டுப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment