படையினர் நிலத்தை கைப்பற்றினாலும் புலிகளின் எதிர்ப்பு நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியநிலை
வன்னியில் படையினர் நிலங்களை கைப்பற்றினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த புதன்கிழமையன்று 57ஆவது படைப் பிரிவினர் முன்னேறுவதற்கு முயற்சித்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு காரணமாக பழைய நிலைகளுக்கே திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில வார இதழொன்றில் எழுதிய கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்புக் காரணமாகவே கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நடவடிக்கைகள் தாமதமாகின்றன. எனினும் படையினரின் மனோ நிலை தொடர்ந்தும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
முகமாலையில் முதலாம் நிலை முன்னரங்குகள் கைப்பற்றப்பட்டபோதும் இரண்டாம் நிலை முன்னரங்குகளில் கடும் பயிற்சி பெற்ற தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் இருப்பதாக இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாகர்கோவில், கிளாலி மற்றும் கண்டல் ஆகிய இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடுருவல்கள் இருக்கலாம்.
அக்கராயனில் நிலைகொண்டுள்ள 57ஆவது படைப்பிரிவினர் கிளிநொச்சியை நோக்கி முன்னேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் இரணைமடு தாங்கி வரையிலும் முன்னேறியுள்ளனர்.
அதிரடிப் படையின?ன் 3ஆவது விசேட படைப்பி?வு ஏ9 வீதியின் நெடுங்கேணியின் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றுவதற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். முல்லைத்தீவின் தெற்குப் பகுதியில் படையினர் பாரிய எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிவரும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்தும் ஆயுத விநியோகங்கள் உரியமுறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீரகேசரி 15.12.08
0 விமர்சனங்கள்:
Post a Comment