மைக்கல் ஜக்ஸன் நோயால் அவதிப்படவில்லை
உலகப் பிரபல பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜக்ஸன் கடுமையான நுரையீரல் நோயொன்றால் பீடிக்கப்பட்டு மரணத் தறுவாயில் உள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கு அவரது அலுவலக வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
மைக்கேல் ஜக்ஸனின் சுயசரிதையை எழுதிவரும் அயன் ஹால்பெரின் என்பவரே மைக்கல் ஜக்ஸன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக பிரித்தானிய "சண்டே எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் மைக்கல் ஜக்ஸனின் சார்பில் பேசவல்லவரான தொஹ்மே தொஹ்மே விபரிக்கையில், ""சுயசரிதை எழுத்தாளரின் தகவல்கள் குறித்து கவலையடைகிறோம். அவரால் எழுதப்படும் அதிகாரபூர்வமற்ற சுயசரிதை நூலுக்காக ஊக்குவிப்பு வழங்குவதை ஊடகங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கும் என நம்புகிறோம்'' என்று கூறினார்.
ஜக்ஸன் ஆரோக்கியமாக உள்ளார். உலகளாவிய ரீதியில் விசேட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முகமாக பிரதான பொழுதுபோக்கு ஏற்பாட்டுக் கம்பனியொன்றுடனும் தொலைக்காட்சி வலைப்பின்னல் ஒன்றுடனும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment