கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தும் புலிகளின் திட்டம் அம்பலம்
விமான மார்க்கமாகவும் தரைமார்க்கமாகவும் ஏக காலத்தில் வந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் வான் படையினரது தாக்குதல் விமானங்கள் மீதும் பாரிய தாக்குதலை நடத்துவதற்காக புலிகள் திட்டம் தீட்டியிருந்தமை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய தாக்குதலை மேற்கொள்ளவென கொழும்புக்குள் ஊடுருவியிருந்த புலிகளது இரு தற்கொலை குண்டுதாரிகள் அண்மையில் கைது செய்யப்பட்டபோதே அவர்களிடம் விசாரணை செய்தபோது மேற்படி தகவல்கள் அம்பலமாகின. மேற்படி தாக்குதல் நடவடிக்கைக்கென புலிகளது தற்கொலை குண்டுதாரிகள் 20 பேர் வரை தயார் நிலையில் இருந்ததோடு அவர்கள் அனைவரும் இதுவரையில் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பகுதியில் வந்து மறைந்திருப்பதாக கைது செய்யப்பட்டுள்ள புலிப் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிøலயம் மீதான தாக்குதல் திட்டம் வெற்றியடைந்தாலோ அல்லது முறியடிக்கப்பட்டாலோ எப்படியிருப்பினும் தாக்குதலை மேற்கொள்ளும்படியே புலிகளின் தலைவர் பிரபாகரனால் இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இத்தாக்குதலின் முக்கியமான நோக்கமாக விமானப் படையினரது கிபீர் விமானங்களை தாக்கியழிப்பதோடு கட்டுநாயக்க விமான நிலையத்தை முற்றாக நிர்மூலமாக்கி அதன் செயற்பாட்டை சீர்குலைப்பதாகும் என மேற்படி தகவல்கள் கூறுகின்றன.புலிகள் தங்களது இரு விமானங்கள் மூலமாக வந்து தாக்குதலை மேற்கொள்வதோடு தரைமார்க்கமாகவும் விமானப் படைத் தளங்கள் மீது தாக்குதலை ஏக காலத்தில் மேற்கொள்வதே அவர்களது திட்டமாக அமைந்திருந்தது. மேற்படி தாக்குதல் திட்டமானது அனுராதபுர விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஒத்ததாகுமென பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்றனர்.
(திவயின 23.12.2008)
வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment