தேள் ராணி காஞ்சனாவின் புதிய சாதனை
"தேள் ராணி" என செல்லமாக அழைக்கப்படும் தாய்லாந்தைச் சேர்ந்த பெண், உயிருள்ள 7 அங்குல நீளமான பாரிய விஷத் தேளை தனது வாயில் இரு நிமிடங்களுக்கு மேலாக வைத்திருந்து புதிய உலக சாதனையொன்றைப் படைத்துள்ளார்.
தாய்லாந்தின் பத்தயா நகரிலுள்ள கடைத் தொகுதி கட்டிடமொன்றில் பெருந்தொகையான பார்வையாளர்கள் மத்தியில் நின்றபடி காஞ்சனா கேத்கேவ் (39 வயது) என்ற பெண் இந்த சாதனையை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
அவர் மேற்படி தேளை சரியாக 2 நிமிடங் கள் 3 செக்கன்கள் தனது வாயில் வைத்திருந் ததாக தெரிவிக்கப்படுகிறது.
காஞ்சனா தனது அடுத்த கட்ட சாதனை முயற்சியாக ஒரு கண்ணாடிப் பெட்டியில் 5000 தேள்களுடன் 33 நாட்களைக் கழிக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் 2002 ஆம் ஆண்டு 3400 தேள்களுடன் 32 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment