துருக்கிய "புஷ்' பாதணிகளுக்கு உலகெங்கும் பெரும் கிராக்கி
Ramazan Baydan, owner of the Baydan Shoes factory, poses in Istanbul with a newly produced copy of the shoe (dubbed "Bush Shoes") that was thrown at US president George Bush by an Iraqi journalist on December 14, 2008. The maker of the shoe has had to take on 100 extra staff to cope with a surge in demand for his footwear
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் மீது ஈராக்கிய ஊடகவியலாளரால் வீசப்பட்ட காலணிகளைத் தயாரித்த துருக்கிய நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என்றும் இல் லாதவாறு கிராக்கி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இஸ்தான்புல்லைத் தளமாகக் கொண்டு செயற்படும் பேடன் ஷூஸ் என்ற நிறுவனத்தின் குறிப்பிட்ட பாதணி வகை தயாரிப்புக்கு ஏற்பட்ட கிராக்கியையடுத்து, அந்நிறுவனம் நிலைமையை சமாளிக்க 100 மேலதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
முன்தாஸர் அல்ஷெய்டி என்ற ஊடகவியலாளரால் புஷ் மீது வீசப்பட்ட "மொடல் 271' என்ற பாதணிக்கு தற்போது "புஷ் பாதணி' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது என பேடன் ஷூஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி பிரதிநிதியான ஒனர் பொகாதெகின் தெரிவித்தார்.
புஷ் மீது காலணிகள் வீசப்பட்டதையடுத்து, தற்போது "புஷ் காலணி' என அழைக்கப்படும் காலணிகளின் விற்பனை 4 மடங்கால் அதிகரித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமொன்று மேற்படி காலணிகளின் 18,000 ஜோடிகளுக்கான கேள்வியை அனுப்பி வைத்துள்ளதாக பாதணி கடையின் உரிமையாளரான ரமழான் பேடன் தெரிவித்தார்.
இந்நிலையில் சிரிய நாட்டுக் கம்பனியொன்று முன்தாஸரின் காலணிகளை தமது நிறுவனமே தயாரித்தது என உரிமை கோரி வருகிறது.
அதேசமயம், முன்தாஸரின் சகோதரரான துர்ஹாம் அல் ஷெய்டி, தனது சகோதரரின் நடவடிக்கைகளை வர்த்தகமாக்க பலரும் முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment