மரணத்தின் விளிம்பில் மைக்கேல் ஜக்ஸன்
உலகப் பிரபல பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸன் உயிருக்காக போராட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
50 வயதான மைக் கேல் ஜக்ஸன் அரிதாக ஏற்படும் நுரையீரல் நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது இடது கண்ணின் பார்வை 95 சதவீதம் இழக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு நுரையீரல் மாற்றுச் சிகிச்சையொன்று செய்வது அத்தியாவசியமாகவுள்ள நிலையிலும், அவரது உடல்நிலை பலவீனமாக இருப்பதால் அத்தகைய சத்திர சிகிச்சையை அவருக்கு மேற்கொள்வது சாத்தியமில்லை எனவும் மைக்கேல் ஜக்ஸனின் சுயசரிதையை எழுதிவரும் அயன் ஹால்பெரின் தெரிவித்தார்.
அமெரிக்கர்களில் 5,000 பேருக்கு ஒருவருக்கே இத்தகைய நோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும், இந்நிலையில் மைக்கேல் ஜக்ஸன் இந்த நோயுடன் பல வருடங்களாக போராடி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மைக்கல் ஜக்ஸனின் மூத்த சகோதரரான ஜெராமினும் தனது சகோதரர் மரணத் தறுவாயில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment