சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் குடாநாட்டில் சுட்டுக்கொலை
யாழ் குடாநாட்டில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் அலுவலகப் பணியாளர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணியளவில் நல்லூர்க் கோயிலின் பின்வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாகவும், வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய சுந்தரலிங்கம் கெங்காதரன் என்பரே இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதாகவும் யாழ் செய்தியாளர் அறியத்தருகிறார்.
குறித்த நபர் வீட்டிலிருந்து வேலைக்காக புறப்பட்டுச்சென்று பேரூந்திலிருந்து இறங்கி நல்லூர்க் கோயிலின் பின்வீதியில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போதே இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் தமது யாழ் அலுவலகப் பணியாளர் என்பதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment