விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்
விடுதலை புலிகள் சமாதான பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக விடுதலை புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். அசோசியேட் பிரஸ்ஸிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"நமது மண்ணினையும் , மக்களையும் பாதுகாப்பதற்கு பல முறியடிப்பு தாக்குதல்களையும், போர் வியூகங்களையும் விடுதலை புலிகள் இயக்கம் மேற்கொண்டுள்ளது.நேரமும். இடமும் சரியாக வரும் போது நாம் இழந்த மண்ணினை மீளப்பெறுவோம்"என பா. நாடேசன் அவ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
"விடுதலை புலிகள் அமைப்பு புதிய சாமாதாப் பேச்சுவார்த்தைக்கு தாயாரக உள்ளது.எனினும் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளில் உறுதியாக உள்ளது "என விடுதலைபுலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார்.
அதேவேளை , "கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கம் விடுதலைபுலிகளுடன் சமரச முயற்சியில் ஈடுபட முயன்றது.எனினும் அவர்கள் தகுந்த பதில் தர தவறியுள்ளனர். விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காவிடின் இராணுவத்தினர் தற்போது இருக்கும் நிலைகளில் இருந்து ஒரு அடி கூட பின்னகர மாட்டார்கள் என அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடகப் பேச்சாள்ர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment