கிளிநொச்சி, முல்லை தீவிலிருந்து மக்களை விடுவிக்காவிடின் விடுதலைபுலிகள் மீது தடை, வரலாற்று புத்தகத்தில் இருந்து அவர்களை துடைத்தெறிவேன் என்கிறார் ஜனாதிபதி
வீரகேசரி நாளேடு 12/23/2008 8:59:42 AM - 2009 ஆம் ஆண்டை 'படையினரின் வெற்றி ஆண்டு' என்று நான் பெயரிடுகின்றேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறு செய்யாவிடின் புலிகளைத் தடைசெய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிவதற்கும் நான் பின்நிற்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற தலைவர் இனவாத தலைவர் அல்ல. சகல இனமக்களும் ஒற்றுமையாக கௌரவத்துடன் வாழும் ஐக்கிய இலங்கை உருவாக்கப்படுவதே எமது நோக்கமாகும். பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவ டிக்கை எக்காரணத்திற்காகவும் கைவிடப்படமாட்டாது பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு யுத்த நிறுத்த உட்படிக்கைக்கு செல்வதற்கு நான் தயாரில்லை அதன் மூலமாக படையினர் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் நான் நன்கறிவேன் என்றும் அவர் சொன்னார்.
உலக பொருளாதார சிக்கல் மற்றும் சர்வதேச பயங்கரவாதத்திற்கு மத்தியில் எம்முன்னிற்கின்ற சவால்கள் தொடர்பில் ஓர் கொடியின் கீழ் இலங்கை இனத்தினரை திரட்டல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள், மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;
1948 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 65525 சதுர கிலோமீற்ற பரப்பளவு கொண்ட பூமி இலங்கைக்குரியது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் கடந்த மூன்று வருடங்களில் 65525 சதுர கிலோமீற்றர் கொண்ட பூமியில் எத்தனை பங்கில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்தை செயற்படுத்துவதற்கு முடிந்தது?
வடக்கு என்றவுடன் அடுத்தப்படியாக தெற்கு என்றே கூறவேண்டும் எனினும் வடக்கு என்றவுடன் கிழக்கு என்றே எமது இனத்தின் நாக்கு பழக்கப்படுத்தப்பட்டிருந்தது. அது சுதந்திரதற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் மூலமாகவே அவ்வாறு செய்யப்பட்டது.
இந்திய இராணுவத்தினரால் தோல்வியடையச்செய்யமுடியாத புலிகளை இலங்கை இராணுவத்தினரால் எவ்வாறு தோல்வியடைய செய்யப்போகின்றார்கள் என்ற கேள்வி எமது சமூகத்தினரின் இதயத்திற்குள் பொதிந்திருந்தது.
ஆயுத பலம் தொடர்பில் சிந்திக்கவேண்டாம் என்ற விசுவாசம் உங்களுடைய இதயங்களில் எழுதப்பட்டிருக்கவில்லையா? புலிகள் கப்பம் பெற்று சேர்க்கும் பணம் புலிவங்கி என்றும், கப்பம் ஈழத்திற்கான வரி என்றும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கின்ற புலிகளை புலிபொலிஸ் என்றும் எமது இனத்தின் நாக்கு வளைந்திருந்தது இல்லையா? இலங்கையின் ஒரு முனை தெய்வேந்திர முனை என்று கூறுகின்ற நேரத்தில் மறுமுனை பருத்திதுறை என்று கூறமுடியாத நிலை இருந்தது. சில தேவைகளை முழுமைப்படுத்தப்பட்டிருந்தால் புலிகள் அமைப்பை ஐக்கிய நாடுகள் சபையின் நாற்காலியில் அமரவைப்பதற்கு எமது முன்னாள் தலைவர்கள் புற்றுக்குள் தயாராக இருந்தனர்.
சமூகம் கூறுவதை போல தலைவர் என்பவர் அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு முன்செல்பவர் அல்லர். பிழையில்லாத சாதாண நிலையில் இருந்துக்கொண்டு அதற்காக மக்களை அணித்திரட்டுபவனே தலைவனாவான். அன்று மஹிந்த சிந்தனையில் ஐக்கிய இராஜியம், ஐக்கிய இலங்கை என்ற வசனங்களை திணிக்கின்ற போது சர்வதேசத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஷ இனத்தை அப்பால் படுத்துகின்றார் என்றனர். பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கு கனவு என்று நினைத்துக்கொண்டிருந்தனர். அந்த கனவே இன்று நனவாகிகொண்டிருக்கின்றது.
பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்தபோது அபிவிருத்தி கனவானது என்றும் நினைத்தனர். பயங்கரவாதத்தினால், வீதிக்கு தார் போடமுடியாது, வைத்தியசாலைக்கு இயந்திரங்களை வழங்கமுடியாது ரயிலுக்கு எஞ்சினோ,பெட்டியோ வாங்கமுடியாது. என்றும் கூறினர். கடந்த மூன்று வருடங்களுக்கு 3000 கிலோமீற்றர் புதிய பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது, அரச வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள புதிய துறைமுகம்,விமான நிலையம் மற்றும் நீர்மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவைவையாவும் பகற்கனவல்ல.
இன்று மூன்று வருடங்களுக்கு முன்னார் வவுனியாவிற்கு அப்பால் செல்கின்ற போது மடு தேவாலயத்திற்கு செல்ல முடியும், தொப்பிக்கலை கைப்பற்றுவதற்கு இராணுவத்திற்கு முடியும் என்றும் யாராவது நினைத்தார்களா? கிழக்கை மீட்டு அங்கு ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் என்று இன்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? சாதாரண தேர்தலை நடத்தி நாட்டை பிரிப்பதற்கு பதிலாக மாகாண சபையை நிறுவமுடியும் என்று யாராவது நினைத்தார்களா? கிளிநொச்சியில் பயங்கரவாதியின் பிரதான பதுங்குகுழிக்கு குண்டுவீச முடியுமென்று யாராவது நினைத்தார்களா?
ஒரு வேலைவாய்ப்பை கூட வழங்க கூடாது என்று சுற்றரிக்கையின் மூலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்புகளை வழங்கி வேலையற்றோர் தொலைகையை நூற்றிற்கு 15 வீதமாக குறைக்கமுடியும் என்று யாராவது நினைத்து பார்த்தார்களா? வேலைத்திட்டத்தின் மூலமாக எமது சக்தி காண்பிக்கப்படுகின்றது வேகத்தின் மூலமாக பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை காண்பிக்கப்படுகின்றது. பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் பின்னர் நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் முழுமையான அவதானத்தை செலுத்த முடியும். நாம் சரியான திசையில் சரியான அபிவிருத்திகளையை தேர்ந்தெடுத்துள்ளதாக சர்வதேசமே ஏற்றுக்கொண்டுள்ளது. இவற்றை நாம் பொதுமக்களின் நலன் கருத்தியே மேற்கொண்டுவருகின்றோம்.
மக்கள் மத்தியில் செல்லவும் அவர்களிடம் படிப்பினை பெற்றுக்கொள்ளவும் சேவையை வழங்கவும் உலகிலுள்ள எந்தவொரு அரசியல் தரிசனமும் இந்த உண்மைக்கு அடிப்பணிந்துள்ளது. உலகத்திலுள்ள அரசியலமைப்புகள் அதன் அர்த்தத்தை இந்த நாட்டிற்குள் செலுத்தி பார்க்கப்பட்டது. பொதுமக்களை எலிகளாகவும் நாட்டை இராசயன கலைக்கூடமாக பயன்படுத்தி பல தசாப்தங்களாக அபிவிருத்தி தொடர்பான பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையை சிங்கபூராக மாற்றுவதற்கும் பிரான்ஸ், அமெரிக்க முறையில் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனர் ஆயினும் நம்நாட்டு மக்களின் இதயம், கூரிய அறிவு, கலாச்சாரம் போன்றவ கருத்தி கொள்ளப்படவில்லை.
உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்ட நாடுகளில் மக்கள் இரண்டு நேரம் சாப்பிடுதல் மற்றும் வேலைவாய்ப்புகளை குறைத்தல், நிவாரணங்கள் குறைத்தல் தொடர்பில் எதுவுமே பேசப்படுவதில்லை. எனினும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் இன்று முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது.
சர்வதேசத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு நாம் முகம்கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம் எனினும் அடுத்த வருடத்தில் எமது இறக்குமதி செலவு 2000 டொலர் மில்லியன் ரூபா குறைவடைவதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றன. இந்த அரசாங்கம் பொது மக்களின் அரசாங்கம் அரசியல் ரீதியில் விலைகளை குறைப்பதற்கு நாம் தயார் எனினும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கள் மற்றும் எரிபொருட்களுக்கான வரி உயர்மட்டத்தில் வைத்துக்கொள்ளப்பட்டது.
அதிகாரம் மற்றும் பொறுப்பு தொடர்பில் எனக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன். அது தொடர்பில் எனக்கு அனுபவும் உள்ளது. யார் எந்தவிதமான தீர்மானங்களை எடுக்கின்ற போதிலும் பொதுமக்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு எனக்குள்ளது. எரிபொருட்களுக்கு வரி விதித்தல் என்பது பொறுப்பான தீர்மானமாகும். ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட முடிவல்ல பொதுவான பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானமாகும். எனக்கு பொறுப்புள்ளது என்பதனால் பிரசித்தமாகுவதற்கு தீர்மானங்களை எடுக்கமுடியாது. தீர்மானத்தின் மூலமாக நாட்டு முகம்கொடுக்கும் அழுத்தங்கள் தொடர்பில் நினைக்கவேண்டும்.
பயங்கரவாதிகள் மீண்டும் சக்திபடைக்கப்பட்டார்கள் அதற்குமட்டுமல்லாது தேச துரோகிகள் அதற்காக துணைபோனார்கள். சட்டத்திற்கு ஓர் அங்குலத்திற்கு அப்பால் சென்று சிலர் நிர்வாகம் செய்தனர். நாடு சரியான பாதையில் பயணிக்கவேண்டுமாயின் பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்டவர், நீதிமன்றம் அவதானத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அவ்வாறு செய்யாவிடின் நாட்டை நிர்வகிக்கமுடியாது. நிறைவேற்று அதிகாரம் இருக்கின்ற போதிலும் நாம் எமது அதிகாரத்திற்கு அப்பால் ஓர் அங்குலம் கூட சென்றதில்லை. போகவும் மாட்டோம் எனினும் மக்கள் பொறுப்புகூறவேண்டியது நிறைவேற்று அதிகாரியின் பொறுப்பாகும். பாராளுமன்றம் பொதுவானதை கவனத்தில் கொண்டே தீர்மானத்தை எடுக்கும்.
பல சவால்களுக்கு முகம்கொடுத்த போதிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எமது நிறைவேற்றும் அதிகாரம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோதிலும் அதற்கு முகம்கொடுத்தோம் பலியெடுப்புகள் தொடர்ந்தமையினால் பயங்கரவாதத்தை முடக்குவதற்கு எமக்கு மாற்று வழியில்லை. எமக்கு மாற்றுவழி இன்மையினால் உத்தரவின் பிரகாரம் அதியுயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றினோம், இரவு நேரங்களில் வீடுககளை சோதனைக்கு உட்படுத்துவதை தவிர்த்தோம்.
பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கைக்கான நிதி, உரமானியம், சமுர்த்தி மற்றும் 12 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குவதற்கும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் எமக்கு பொறுப்பு இருக்கின்றது. அது இரண்டு மணித்தியாலம் கலந்துரையாடி எடுக்கின்ற முடிவல்ல அதனால் தான் அமைச்சரவை கூடி ஆராய்ந்து முடிவெடிக்கவுள்ளது அது நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது அல்ல அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படல் வேண்டும்.
தேசிய எதிரிக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற நேரத்தில் நாம் அனைவரும் சகலவிடயம் தொடர்பிலும் விளிப்பாக இருக்கவேண்டும் எனினும் புலிகளுடன் இணைந்து சூழ்ச்சிகளை மேற்கொண்ட அரசியல் வாதிகளுக்கு எதிராக நான் தனிப்பட்ட ரீதியில் பலியெடுக்கவிரும்பவில்லை.
அரசியல் அதிகாரத்தில் மட்டும் விசுவாசம் கொண்டிருந்தால் நாம் எமக்கு சாதகமான சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு சென்றிருப்போம். எனினும் எமது அரசியல் அதிகாரத்திற்கு அப்பால் நாட்டில் நிலைமைக்கு முதலிடம்கொடுத்தோம். தேர்தல் வெற்றிக்கு அப்பால் தாய்நாட்டின் ஐக்கியத்தை பெருமையாக கொண்டோம். இனத்தின் பொது வெற்றிக்காக முதலிடம்கொடுத்தோம். அரசியல் அதிகாரத்தை விடவும் நாட்டில் இரத்த துளி சிந்துகின்ற பாதையை மூடுவதற்கு முதலிடம் கொடுத்தோம்.
ஐ.தே.க, ஜே.வி.பி.,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எதிராளிகள் இல்லை பயங்கரவாதம் பொதுவான எதிராளியாகும், அரசியல் ரீதியில் எம்மிடையே முரண்பட்ட கொள்கைகள் இருக்கலாம். சிங்கள,தமிழ், முஸ்லிம் இனத்தவர்களோ, எதிராளிகள் இல்லை அவர்களுடைய பொதுவான எதிராளி பிரிவினைவாதமாகும்.
இவற்றுக்கு மத்தியில் எமது அரசாங்கத்திற்கு 2009 ஆம் ஆண்டு பல்வேறு வழிகளிலும் முக்கியமான ஆண்டாக –இருக்கும் என்பதே எனது நம்பிக்கையாகும். அதற்காக சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக ஐக்கியத்தை கட்டியெழுப்ப வேண்டியது பாரிய பொறுப்பாகும் . வீரமிக்க படையினர் தமது இறுதி படைநடவடிக்கையில் தாய்நாட்டை 2009 ஆம் ஆண்டு மீட்டெடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.புலி பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலிருந்து எமது தாய்நாட்டை இறுதியாக மீட்டெடுக்கும் ஆண்டாகவே 2009 ஆம் ஆண்டு அமையும். அதற்கு எதிரான சகல சூழ்ச்சிகளுக்கும் உருவாகும்.
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
2009 ஆம் ஆண்டு "படையினரின் வெற்றி ஆண்டு" என்று நான் பெயரிடுகின்றேன் என்பதனால் நாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற சூழ்ச்சிகளுக்கு எதிராக ஐக்கியப்படுமாறு சகல தேசபற்றுடைய கட்சிகளுக்கும் நான் அழைப்பு விடுகின்றேன் விசேடமாக வரவுசெலவுத்திட்டத்திற்க ஆதரவாக வாக்களித்த தேசிய சுதந்திர முன்னணிக்கும் அழைப்பு விடுகின்றேன்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய தேசியக்கட்சியியுள்ள தேசப்பற்றாளர்களுக்கும் அழைப்பு விடுகின்றேன் அத்துடன் பயங்கரவாத்ததை தோற்கடித்து நாட்டை முன்னோர்க்கி நகர்த்துவதற்கு கைகோர்க்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுகின்றேன்.
பயங்கரவாத்திற்கு எதிரான செயற்படுகின்ற தலைவர் இனவாத தலைவன் அல்ல சகல இனமக்களும் ஒற்றுமையாக கௌரவத்துடன் வாழும் ஐக்கிய இலங்கை உருவாக்கப்படுவதே எமது நோக்கமாகும் பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை எக்காரணத்திற்காகவும் கைவிடப்படமாட்டாது பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு யுத்த நிறுத்த உட்படிக்கைக்கு செல்வதற்கு நான் தயாரில்லை அதன் மூலமாக படையினர் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் நான் நன்கறிவேன்.
அதுபோல 2009 ஆம் ஆண்டு பிறப்பிக்கின்ற வேளையில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகியவற்றிக்குள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி சகல தமிழ் மக்களையும் விடுதலைச்செய்யுமாறு புலிகளிடம் விருப்பத்துடன் கேட்டுக் கொள்கின்றேன். அவ்வாறு செய்யாவிடின் புலிகளை தடைச்செய்வதில் மட்டும் நின்றுவிடாது வரலாற்று புத்தகத்திலிருந்து அவர்களை துடைந்தெறிந்து விடுவதற்கும் நான் பின்னிற்கமாட்டேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்டவிரும்புகின்றேன்.
நந்தார் எமக்கு சமாதான செய்தியையே கொண்டுவருகின்றது அந்த சமாதானம் எமது நாட்டில் உதிப்பது வெகுதொலைவில் இல்லை. 2009 ஆம் ஆண்டு சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு இன்றிலிருந்தே நாம் தயாராகவேண்டும், படையினர் வெற்றி ஆண்டு என்பதை நிரூபனப்படுத்துவதற்கு சகல பேதங்களையும் மறந்து ஒன்றினைய வேண்டும்.
virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment