த.ம.வி.பு. அமைப்பிலிருந்து மேலும் 100 சிறுவர்கள் விடுதலை
யுனிசெப் அமைப்புக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய மேலும் 100 சிறுவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பில் சிறுவர்கள் நலன்காப்பு நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து போரளி அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப்பி டுமலி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எந்தவொரு சிறுவரும் போராளிகளாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே தமது குறிக்கோள் எனவும், விடுவிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் கூறினார்.
புனர்வாழ்வு வழங்கப்பட்ட பின்னர் அச்சிறுவர்களுக்கு பாடசாலைக் கல்வி வழங்குவதா அல்லது தொழில்நுட்பக் கல்வி வழங்குவதா என்பது பற்றி தீர்மானிக்கப்படும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.
“சமூகத்தில் அவர்கள் மீண்டும் நல்லபடியாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமெனவே நாம் விரும்புகிறோம்” என்றார் அவர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment