பொதுமக்களை வெளியேற அனுமதிக்கவும் : யுனிசெப் புலிகளிடம் வேண்டுகோள்
முல்லைத்தீவிலுள்ள பொதுமக்களை வெளியேற அனுமதிக்குமாறு யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடபிரதிநிதி பிலிப்பி டுமலி வேண்டுகோள் விடுத்தார்.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் முன்னரங்க நிலைகள் நாளாந்தம் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், மோதல்களில் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே விடுதலைப் புலிகள் அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் மோதல்களின் பொதுமக்கள் காயமடைவதை இராணுவத்தினரும் புலிகளும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி கூறினார்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையை விட்டு வெளியேறியிருக்க மாட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவரை இந்தியா ஒருபோதும் வரவேற்காதென நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
எனவே விடுதலைப் புலிகளின் தலைவர் தென்கிழக்கு ஆசியாவின் இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளுக்கே செல்லவேண்டி இருக்கும் எனவும், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்களால் இந்தக் கடல்ப் பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment