புலிகளின் 24 உடல்கள் அ'புர மயானத்தில் அடக்கம்
அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 24 உடல்கள் அநுராதபுரம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மணலாறு மற்றும் முல்லைத்தீவு களமுனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களே இவையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்ட இந்த 24 உடல்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரி பிரேத அறையில் வைக்கப்பட்டன.
இந்த உடல்களை வன்னிக்கு எடுத்துச் சென்று விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டபோதும், புலிகளைத் தேடிப் பிடித்து உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துவிட்டதால் 24 உடல்களும் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, நீதிமன்றின் அனுமதியுடன் 24 உடல்களும் அநுராதபுரம் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment