வான் பரப்புக்குள் அத்துமீறி ஊடுருவிய "றோ' உளவு விமானம்
இந்திய பாதுகாப்புத் துறையின் பிரதான உளவுப் பிரிவாகிய ""றோ' உளவு அமைப்பின் அதிகாரிகள், அவர்கள் பயன்படுத்திவரும் இந்திய விமானப்படையின் நவீன உளவு விமானம் ஒன்றில், ஸ்ரீலங்கா அரசின் அனுமதியின்றியும் முன்னறிவித்தல் கொடுக்காத நிலையிலும் இரகசியமாக கிளிநொச்சி பிரதேச வான் பரப்புக்குள் ஊடுருவி கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ""றோ' அமைப்பு கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான நவீன வசதிகள் கொண்ட போயிஸ் விமானத்தையோ அல்லது எம்பிறெஸ் விமானத்தையோ (BOEING or EMPERORESS)பயன்படுத்தியே கிளிநொச்சிப் பிரதேசத்தைக் கண்காணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
""றோ' உளவு அமைப்பின் வான் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென செயற்பட்டுவரும் இந்த விமானம் தமிழ்நாட்டிலுள்ள ""றோ'வுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட விமான நிலையம் ஒன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை ஜனவரி 10 ஆம் திகதி புறப்பட்டு இரகசியமாக ஸ்ரீலங்காவின் வடபகுதிக் கடல் மார்க்கமாகப் பறந்துவந்து ஸ்ரீலங்காவின் வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்துள்ளது. இதுபற்றி ஸ்ரீலங்கா பாதுகாப்புத்துறை தரப்பில் தெரியவந்துள்ள சில தகவல்களுக்கேற்ப மேற்படி ""றோ' உளவு சேவையின் அதிகாரிகள் பயணம் செய்த விமானம் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையிலுள்ள விமான நிலையத்திலிருந்தே புறப்பட்டதாகவும் பின்னர் பாக்குநீரிணையினையின் குறிப்பிட்டதொரு கடற்பகுதி வழியாகப் பறந்துவந்து கிளிநொச்சி வரை வந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த ""றோ' உளவு விமானம் கிளிநொச்சி வான் பரப்பில் 40,000 அடிக்கு மேலாகப் பறந்து அதன் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த விமானத்தில் செய்மதிகளில் பொருத்தப்படும் அதிநவீன கமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் இவற்றின் மூலமாக மேகங்கள் மூடிக்கிடக்கும் நிலப்பரப்பையும் துல்லியமாகப் படம்பிடிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொடர்புகளுக்காக செய்மதி மூலமான நவீன தொலைபேசி சாதனங்கள் இந்த ""றோ' விமானத்தில் பொருத்தப்பட்டிருப்பதாகவும், 40,000 அடி உயரத்துக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தாலும் அதில் பயணம் செய்த ""றோ' உளவுசேவை அதிகாரிகள் இந்தியாவிலுள்ள தமது ""றோ' தலைமையகத்துக்கு மேற்படி நவீன செய்மதித் தொலைபேசி சாதனம் மூலமாக தமது கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ""றோ' உளவு அமைப்பின் தலைமையகம் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியிலுள்ள ஈலொட்னி பெருஞ்சாலையில் அமைந்துள்ளது. நவீன செய்மதித் தொடர்பு வசதிகள் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டிருப்பதால் விமானத்திலுள்ள குறித்த செய்மதித் தொலைபேசி சாதனம் மூலமாக அதன் தலைமையகத்திலிருந்து அறிவிக்கப்படும் தகவல்களை மட்டுமன்றி கீழே நிலப்பரப்பிலிருந்து பரிமாறப்படும் பிற தொலைபேசித் தொடர்புகளையும் கேட்கமுடியும். அத்துடன், ""றோ' விமானத்திலுள்ள உயர்தொழில்நுட்பங்களைக் கொண்ட கமராக்கள் மூலம் கீழே பெரும்பரப்பிலான நிலப்பகுதியையும் ஒரே தடவையில் துல்லியமாகப் படம்பிடிக்க முடிவதுடன் அடர்த்தியான முகில் பரப்புக்கு மேல் பறந்துகொண்டிருந்தாலும் முகில்களினூடாக கீழ் நிலப்பரப்பைத் தெளிவாகக் காட்டும் வகையில் படம் பிடித்துக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட உயரத்துக்குமேல் அதாவது சுமார் 10,000 அடிக்கு மேல் விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே உளவு விமானங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் வழமையான கமராக்கள் மூலமாக நிலப்பரப்பைத் தெளிவாகப் படம் பிடிப்பது கஷ்டமாகும். ஆனால், ""றோ' விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த செய்மதித் தொழில்நுட்பக் கமராக்கள் வெளியான நிலப்பரப்பை மட்டுமல்ல முகில் மூடிய நிலப்பரப்பையும் துல்லியமாகப் படம்பிடிக்கும் சக்தி வாய்ந்தவையாகும். ""றோ' அமைப்பு இவ்வாறு உயர் தொழில்நுட்ப கமராக்கள் பொருத்தப்பட்டவையும், போயிஸ் மற்றும் எமபறறெஸ் வகையைச் சேர்ந்ததுமான பல விமானங்களை வான்மூல உளவு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி இவ்வாறு கிளிநொச்சி பிரதேசத்துக்கு மேலாக உளவு விமானம் மூலம் இரகசியமாகப் பறந்து ""றோ' அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை எதற்காக மேற்கொண்டார்கள் என்பதும், குறிப்பாக எந்தப் பகுதியைக் கண்காணித்தார்கள் என்பதும் தெரியாமலே உள்ளது. கிளிநொச்சியிலிருந்து புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்ட நிலையிலும் மேலும் பொதுமக்களும் பெரும்பாலும் இடம்பெயர்ந்துவிட்ட நிலையிலும் ""றோ' அமைப்பு அங்கு அரச படையினர் நிலைகொண்டுள்ள நிலையங்களைத் தவிர வேறு எதனையும் கண்காணித்திருக்க முடியாது. அடுத்து கிளிநொச்சிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கும் அழிவுகளை ""றோ' கண்காணித்திருக்கக்கூடும். அண்மையில் சில வெளிநாட்டு ஊடகங்களில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக அரச படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை பற்றித் தெரிவித்த தகவல்களில், கிளிநொச்சியை அரச படையினர் கைப்பற்ற மேற்கொண்ட யுத்தம் இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவில் ஸ்ராலின்கிராட் நகரைக் கைப்பற்ற ஜெர்மனியப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தாக்குதல் நடவடிக்கைபோன்றது எனவும், இறுதியில் ஸ்ராலின் கிராட்டைச் சுற்றிவளைத்த ஜெர்மன் படையினர், ரஷ்யப் படையினர் அழிக்கப்பட்டதுபோல் கிளிநொச்சியைச் சுற்றிவளைத்த ஸ்ரீலங்கா அரச படையினரும் அழிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தன.
இவ்வாறே இந்திய அரசதரப்பும், இந்திய பாதுகாப்புத்துறையும் ""றோ' உளவு அமைப்பும் கிளிநொச்சியை அரச படையினர் கைப்பற்றுவதற்கு முன்னர் கருதியிருக்கக்கூடும். ஆயினும், அரச படையினர் வெற்றிகரமாக கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட்ட பின்னர், தற்போது ""றோ' அமைப்பு கிளிநொச்சியில் யுத்தத்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய அழிவுகளைக் கண்காணிக்கவோ அல்லது பிரதேச பாதுகாப்பு நிலைமை அரச படையினரின் நிலைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவோ இவ்வாறு இரகசிய விமானக் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா அரசின் அனுமதியின்றி தேசத்தின் வான்பரப்புக்குள் இந்திய விமானம் பிரவேசித்துள்ளதானது ஆகாயவழி அத்துமீறல் அல்லது ஊடுருவல் என்றே கருதப்பட வேண்டும்.
திவயின விமர்சனப் பகுதி: 11.01.2009
0 விமர்சனங்கள்:
Post a Comment