4 வயது மகளை 190 அடி உயர பாலத்திலிருந்து வீசிய தந்தை
தனது 4 வயது மகளை 190 அடி உயரமான பாலத்திலிருந்து ஆற்றில் வீசி படுகொலை செய்த குற்றச்சாட்டில் நபரொருவரை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை மெல்போர்ன் நகரில் யாரா ஆற்றுக்கு மேலாக அமைந்த வெஸ்ட் கேட் பாலத்திலிருந்து மேற்படி 35 வயது நபர் தனது மகளை வீசியுள்ளார்.
எனினும் பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குழந்தையை ஆற்றிலிருந்து மீட்டெடுத்து, ரோயல் சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி மரணமடைந்தார்.
அதேசமயம் அந்தப் பாலத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த அந்நபரின் காரிலிருந்து அவரது ஏனைய 8 வயது மற்றும் 6 வயதுடைய பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்ததாக அந்நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment